தற்போதைய காலகட்டத்தில் வீட்டில் FAN இல்லாமல் இருக்க முடியாத நிலையில் அனைவரும் உள்ளோம்.அதிலும் கோடை காலத்தில் 24 மணி நேரமும் FAN ஆனில் வைத்தபடி தான் வெயிலை கடந்திருப்போம்.
AC,ஏர் கூலர் போன்ற சாதனங்களை வாங்க முடியாதவர்களுக்கு FAN தான் வெப்பத்தை தணிக்கும் மின்சாதன பொருளாக உள்ளது.இந்த பேனில் வேகத்தை அதிகரிக்க,குறைக்க,ஆப் மற்றும் ஆன் செய்வதற்கு ஒவ்வொரு முறையும் சுவிட்ச் பாக்ஸ் நோக்கி நடக்க வேண்டியிருப்பதால் வயதானவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
இதற்கு மாற்று ரிமோட் கண்ட்ரோல்டு பேன் பயன்படுத்தலாம்.இதற்காக நீங்கள் அதிக காசு கொடுத்து ரிமோட் கண்ட்ரோல்டு பேன் வாங்க வேண்டிய அவசியமில்லை.சாதாரண சீலிங் பேனையே ரிமோட் கண்ட்ரோல்டு பேனாக மாற்றலாம்.
சாதாரண FAN-ஐ ரிமோட் கண்ட்ரோல்டு பேனாக மாற்றுவது எப்படி?
முதலில் நீங்கள் மார்க்கெட்டில் விற்கும் ரிமோட் கன்ட்ரோலர் செட்டை வாங்கிக் கொள்ள வேண்டும்.அதில் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் பேனின் வயரிங்கில் பொருத்தப்படுவதற்கு என்று இரண்டு யூனிட் கொடுக்கப்பட்டிருக்கும்.அவற்றை முறையாக பொருத்த வேண்டும்.இவ்வாறு செய்தால் நீங்கள் விரும்பியபடி பேனின் வேகத்தை அதிகரிக்க மற்றும் குறைக்க முடியும்.அதேபோல் உட்கார்ந்த இடத்தில் இருந்து பேனை ஆன் மற்றும் ஆப் செய்ய முடியும்.