உடல் சூடு குறைய வேண்டுமா? அப்போ பாதாம் பிசினை இப்படி சாப்பிடுங்க!
நம்முடைய உடலில் சூடு அதிகமாக இருந்தால் நாம் பல பிரச்சனைகளை சந்திக்கின்றோம். தலை முடி உதிர்தல், கண் எரிச்சல், வயிற்றுப் புண், வாய்ப்புண் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. உடல் சூட்டை தணிக்க நாம் பாதாம் பிசினை பயன்படுத்தலாம்.
பாதாம் பிசினும் ஒரு வகையில் மருந்து பொருள்தான். பாதாம் பிசினில் பெட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து, சோடியம், மெக்னீசியம், புரதம் ஆகிய சத்துக்கள் இருக்கின்றது. இந்த பாதாம் பிசினை உடல் சூட்டை தணிக்க எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
உடல் சூட்டை குறைக்க பாதாம் பிசினை சாப்பிடும் முறை…
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பவுலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொண்டு பின்னர் இதில் பாதாம் பிசினை சேர்க்க வேண்டும். அதன் பின்னர் இதை நன்றாக ஊற வைக்க வேண்டும்.
பாதாம் பிசின் நன்றாக ஊறிய பின்னர் இதை எடுத்து அப்படியே சாப்பிட வேண்டும். அப்படியே சாப்பிட்டால் உடல் சூடு தணியும். மேலும் உடல் சூட்டால் ஏற்படும் வாய்ப்புண், வயிற்றுப் புண், தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
பாதாம் பிசினை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…
* பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிக்கலாம்.
* ஆண்மை குறைவாக இருக்கும் நபர்கள் பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் ஆண்மையை குறைவு பிரச்சனை குணமாகும்.
* பாதாம் பிசின் நம்முடைய தசைகளை வலிமையாக்குகின்றது.
* பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் இருமல், சளி, தும்மல் போன்ற பருவகால நோய்களில் இருந்து விடுபடலாம்.
* சருமத்தில் ஏற்படும் காயங்களை விரைந்து குணப்படுத்த பாதாம் பிசின் உதவுகின்றது.
* உடல் எடையை எவ்வாறு அதிகரிக்கின்றதோ அதே போல உடல் எடையை குறைக்கவும் பாதாம் பிசின் உதவி செய்கின்றது.
* நெஞ்சு எரிச்சல் பிரச்சனையை குணப்படுத்த நாம் பாதாம் பிசினை ஊற வைத்து சாப்பிடலாம்.
* வயிற்று வலி போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் இந்த பாதாம் பிசின் உதவி செய்கின்றது.