சோம்பலை குறைத்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த இரண்டு டிப்ஸ் உங்களுக்குத் தான்!!
தினமும் வேலை செய்து விட்டு சோர்வாக வரும் நபர்கள் அனைவரும் வேலை செய்த கலைப்பில் தூங்கி விடுகிறார்கள். அவர்கள் அடுத்த நாள் வேலை செய்யும் பொழுது முந்தைய நாளை விட மிகவும் மெதுவாக சுறுசுறுப்பு இல்லாமல் வேலை செய்கிறார்கள்.
இது இப்படியே சென்று கொண்டிருந்தால் பின்னர் வேலை செய்யும் அனைத்து நபர்களுக்கும் சோம்பல் அதிகமாகக் கூடும். இவ்வாறு சோம்பல் அதிகமானால் அடுத்து எந்த வேலையையும் செய்யத் தோனாது. எதுவும் செய்யாமல் அப்படியே ஓய்வு எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். எனவே சோம்பலை முறித்து அடுத்த நாளை எவ்வாறு சுறுசுறுப்பாக தொடங்கிய வேண்டும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு பயன்படும் இரண்டு டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.
சோம்பலை முறிக்க உதவும் டிப்ஸ்…
முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் பேரீச்சம் பழங்களை போட்டு ஊற வைக்க வேண்டும். பேரீச்சம் பழம் ஊறிய பின்னர் அதை சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின்னர் அந்த தண்ணீரையும் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சாம்பல் குறைந்து விடும்.
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் டிப்ஸ்:
தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சு பழச்சாறு குடிக்க வேண்டும். அதன் பின்னர் சில உலர்ந்த திராட்சை சாப்பிட வேண்டும். பின்னர் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சுறுசறுப்பாக இருக்கலாம்.