2000 ரூபாயை மாற்ற வேண்டுமா? இதோ பொதுமக்களுக்கு உதவி செய்யும் அமேசான் நிறுவனம் !!
பிரதமர் மோடி கடந்த ஆட்சி காலத்தில் கருப்பு பணங்களின் பயன்பாட்டை நிறுத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்திருந்தார். அதற்கு அடுத்து 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தினார்.
தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பி பெறப்படுவதாக கடந்த மே மாதம் 23ஆம் தேதி அறிவித்திருந்தார். பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் 2000ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் அல்லது டிபாசிட் செய்து கொள்ளுமாறு அறிவிப்பு ஒன்றை அறிவித்திருந்தார்.
இந்த 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம். அதற்கான வசதி செய்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் ஒரே நேரத்தில் 20ஆயிரம் ரூபாய் நோட்டு வரை மாற்றிகொள்ளலாம்.
இந்நிலையில் அமேஸான் ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் அமேசான் வடிக்கையாளர்கள் அவர்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டை தங்களிடம் பொருட்கள் வாங்கிகொள்ளும் வசதியை அமேஸான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட அறிவிப்பாகும்.
மேலும் கேஒய்சி முழுவதும் நிறைவு செய்த கஸ்டமருக்கு 50,000 ரூபாய் வரை அமேஸான் பே இருப்பில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சேர்ந்து கொள்ளலாம் போன்று அறிவிப்புகளையும் அறிவித்துள்ளது.