தாம்பத்திய வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட வேண்டும்? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்க!

Photo of author

By Sakthi

தாம்பத்திய வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட வேண்டும்? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்க!
திருமணமான தம்பதிகள் அனைவருக்கும் இல்லறம் சிறப்பாக இருக்கவும், தாம்பத்திய வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடவும் உதவும் சில உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
திருமணமான தம்பதிகள் அனைவருக்கும் தாம்பத்திய வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்க கணவன் மற்றும் மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும். அதே போல எந்த அளவுக்கு புரிதல் இருக்கின்றதோ அதே அளவுக்கு அவர்களுக்கு மனநலம் இருக்க வேண்டும்.
புரிதல் மற்றும் மனநலம் இருக்கும் பட்சத்தில் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் உடல்நலம் இருக்க வேண்டும். எனவே தாம்பத்திய வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட உதவும் சில உணவு வகைகளை பற்றி தற்பொழுது பார்க்கலாம்.
தாம்பத்தியம் சிறப்பாக இருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள்:
அவகெடோ:
அவகெடோவில் உடலுக்கு நன்மை கொடுக்கும் நல்ல கொழுப்புகள், வைட்டமின் பி6, தாத்துக்கள் ஆகிய சத்துக்கள் இருக்கின்றது. இதில் உள்ள ஒமேகா 3 சத்து இயற்கையாகவே நல்ல உணர்வுகளை தூண்டக்கூடிய சக்தி கொண்டது. இதை சாப்பிடுவதால் தாம்பத்தியம் சிறப்பாக இருக்கும்.
டார்க் சாக்லெட்:
தாம்பத்தியம் சிறப்பாக இருக்க கணவன். மற்றும் மனைவி இருவரும் டார்க் சாக்லெட் சாப்பிடலாம். டார்க் சாக்லெட்டில் ஃபைனிலெதிலமைன் என்ற ஒன்று உள்ளது. இது இன்பத்தையும் தூண்டுதல் உணர்வையும் ஊக்குவிக்கும்.
ஸ்ட்ராபெர்ரி:
தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபட்டு இல்லறம் சிறப்பாக இருக்க கணவன். மற்றும் மனைவி ஸ்ட்ராபெரி பழத்தையும் சாப்பிடலாம். ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி விழிப்புணர்வை அதிகரிக்கின்றது.
வாழைப்பழம்:
தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபட எளிமையாக கிடைக்கக் கூடிய வாழைப் பழங்களை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் ப்ரோமெலைன் உள்ளது. இது உடலில் லிபிடோவை அதிகரிக்கின்றது. மேலும் வாழைப் பழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை உள்ளது. இவை தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபட உதவி செய்யும்.
பாதாம்:
தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு கணவன் மற்றும் மனைவி இருவரும் முக்கியமாக சாப்பிட வேண்டிய உணவு பொருள் பாதாம் ஆகும். பாதாமில் துத்தநாகம் மற்றும் செலினியம் அதிகம் காணப்படுகின்றது. இந்த இரண்டு சத்துக்களும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் ஆண்மைக்கும் அத்தியாவசியமான சத்து ஆகும்.
அத்திப்பழம்:
பொதுவாக அத்திப்பழம் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதே போல தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபட அத்திப்பழம் உதவி செய்யும். அத்திப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் பாலுணர்வை அதிகரிக்கும்.
மிளகாய்:
மிளகாயை சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியுமா என்று கேட்டால் ஆம். மிளகாயில் கேப்சைசின் என்ற சத்து உள்ளது. இது நரம்பு முனைகளை தூண்டுகின்றது. மேலும் இது தூண்டுதல் அதிகரிக்கும்.