உடல் எடையை ஒரே மாதத்தில் அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க!!
நம்முடைய உடல் எடையை ஒரே மாதத்தில் அதிகரிக்க என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சிலர் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்க மறுபக்கம் ஒல்லியாக இருக்கிறோம் என்ற கவலையில் உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு எலும்பும் தோலுமாக ஒல்லியாக இருக்கிறோம் என்று கவலைப்பட்டுக் கொண்டு உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.
இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் ஒரே மாதத்தில் 5 கிலோ வரை உடல் எடையை அதிகரிக்கச் செய்யலாம். அது என்னென்ன உணவுகள் என்பது குறித்து பார்க்கலாம்.
உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவு வகைகள்:
* முழு முட்டை
* சிவப்பு இறைச்சி
* பால்
* உலர்ந்த பழங்கள்
* சாதம்
* உருளைக் கிழங்கு
முழு முட்டை:
முழு முட்டையை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நம்முடைய உடல் எடை அதிகரிக்கும். முட்டையில் கால்சியம், புரதச்சத்து, ஆரோக்கியமான நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது. எனவே முட்டைய சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
சிவப்பு இறைச்சி:
சிவப்பு இறைச்சி என்பது ஒன்றும் இல்லை. ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பாலூட்டிகளின் இறைச்சி ஆகிம். சிவப்பு இறைச்சியில் புரதச்சத்துக்கள் உள்ளது. சிவப்பு இறைச்சி உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது சிவப்பு இறைச்சியை சாப்பிடுவதால் உடலில் தசை வளர்ச்சி அதிகரிக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.
பால்:
பால் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய முக்கிய உணவுப் பொருள் ஆகும். பாலில் கால்சியம், தாதுக்கள், புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் என்று உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் தசை வளர்ச்சிக்கு உதவி செய்யும் கேசீன், மோர் புரதங்கள் ஆகியவை இருக்கின்றது. இதனால் தசைகள் வளர்ச்சி அடைந்து உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை அதிகரிக்க ஒரு நாளுக்கு இரண்டு கிளாஸ் பால் குடிக்க வேண்டும்.
உலர்ந்த பழங்கள்:
உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உலர்ந்த பழங்கள் உதவி செய்கின்றது. உலர்ந்த பழங்களில் ஆக்சிஜனேற்றிகள், கலோரிகள், புரதங்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகியவை இருக்கின்றது.
சாதம்:
உடல் எடைய குறைக்க வேண்டும் என்றால் சாதம் சாப்பிடக் கூடாது. ஆனால் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் தாராளமாக சாதம் சாப்பிடலாம். உடல் எடையை அதிகரிக்க முக்கியத் தேவையாக இருக்கும் கார்போஹைட்ரேட் சத்துக்கள் சாதத்தில் அதிகப்படியாக இருக்கின்றது. ஒரு காப் சாதத்தில் 200 கலோரிகள் இருக்கும். எனவே சாதம் சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்கலாம்.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கில் உடலை அதிகரிக்கச் செய்யும் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிக அளவில் இருக்கின்றது. உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் நாம் உருளைக் கிழங்கையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.