அரசாங்கத்தின் சலுகை கிடைக்க வேண்டுமா! திருநங்கைகளே கட்டாயம் இதை விண்ணப்பியுங்கள்! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Photo of author

By Rupa

அரசாங்கத்தின் சலுகை கிடைக்க வேண்டுமா! திருநங்கைகளே கட்டாயம் இதை விண்ணப்பியுங்கள்! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

திருநங்கைகள்  பொதுவாக பிறப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு அவர்களாகவே பின்னர் தங்களை  பெண்களாக  உணர்ந்து சமுகத்தில் பெண்ணாக வாழ தொடங்குகின்றனர். மேலும் இவர்கள் அலி, பேடி, அரவாணி போன்ற பெயர்களால் கேலி செய்யப்பட்டு சமூகத்தில் ஒடுக்கப்படுகிறார்கள்.

இதனால் இவர்கள் சமூகத்தில் எந்த தொழிலும் செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு  ஆளாகின்றனர்.திருநங்கைகளை 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளது.

தற்போது திருநங்கைகள் சட்டப்படி முழு உரிமையும் பெற்று, சமுகத்தில்  ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக வாழ்கின்றார்கள். திருநங்கையின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு கூத்தாண்டவர் திருவிழா என்பார்கள்.

ஈரோடு மாவட்டத்தின் கலெக்டர் கிருஷ்ணண்ணி புதிய அறிக்கையை  வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் திருநங்கைகள் அனைவரும் தங்களது புதிய அடையாள அட்டையை இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். விண்ணப்பிக்க தவறியவர்கள் தங்களது அடையாள அட்டையை உடனடியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து கொள்ளவும்.

திருநங்கைகள் இந்த அடையாள அட்டையை விண்ணப்பிப்பதன் மூலம் அவர்களுக்கு சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறிப்பிடத்தக்கவை,

உதவித்தொகை ,40 வயதுக்கு மேற்பட்டோருக்கு  ஓய்வூதிய தொகை, சுய  தொழில் உதவித்தொகை  போன்றவை. இணையதளத்தின் மூலம் தங்களது அடையாள அட்டையை விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே மேற்கண்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

எனவே திருநங்கைகள் அனைவரும் தங்களது அடையாள அட்டையை வரும் 24 ம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும். மேற்கண்ட அறிக்கையில் ஏதேனும் ஐயம் ஏற்பட்டால்  கலெக்டர் அலுவலக, ஆறாவது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும்.