உடம்பில் உள்ள அழுக்குகள் நீங்க வேண்டுமா? இதை தேய்த்து குளித்தால் போதும்! 

Photo of author

By Sakthi

உடம்பில் உள்ள அழுக்குகள் நீங்க வேண்டுமா? இதை தேய்த்து குளித்தால் போதும்!
நாம் தினமும் குளித்து வருகின்றோம். அது எதற்காக என்று உங்களுக்கு தெரியும். அதாவது உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கவும், உடல் புத்துணர்ச்சி பெறவும் நாம் தினமும் குளிக்கின்றோம். பெரும்பாலும் உடல் புத்துணர்ச்சி பெறவே குளிக்கிறார்கள்.
 உடலுக்கு புத்துணர்ச்சி எவ்வளவு முக்கியமோ அது போலவே உடலில் உள்ள அழுக்குகள் நீங்குவதும் முக்கியம் தான். உடலில் அழுக்குகள் நீங்கவில்லை என்றால்  அது சருமத்திற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே நாம் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்குவது போல குளிக்க வேண்டும். இந்த பதிவில் உடலால் உள்ள அழுக்குகள் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* சந்தனப் பொடி
* கடலை மாவு
* எலுமிச்சை சாறு
* தேங்காய் எண்ணெய்
செய்முறை…
ஒரு பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சந்தனப் பொடி தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு கடலை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் இறுதியாக தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக கலந்து கொண்டு பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை குளிக்கச் செல்லும் பொழுது உடலில் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து குளித்து வந்தால் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும்.