கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா? பேரீச்சம் பழத்தை இப்படி பயன்படுத்துங்க! 

Photo of author

By Rupa

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா? பேரீச்சம் பழத்தை இப்படி பயன்படுத்துங்க!
நம்முடைய கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை மறையச் செய்ய பேரீச்சம் பழத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் இதனுடன் சேர்க்க வேண்டிய மற்றொரு பொருள் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படுகின்றது. இது எதனால் ஏற்படுகின்றது என்றால் இரவில் அதிக நேரம் திரைகளின் முன்னாள் நம்முடைய கண்கள் இருப்பது தான். அதாவது அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, அதிக நேரம் சொல்போன் பயன்படுத்துவது, அதிக நேரம் லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதால் கருவளையம் ஏற்படுகின்றது.
இந்த கருவளையங்களை மறையச் செய்ய செயற்கையான வழிகளில் பல கெமிக்கல் கலந்து பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்தும் பெழுது பிற்காலத்தில் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடும். எனவே எளிமையாக இயற்கையான வழிமுறையில் கருவளையத்தை எவ்வாறு மறையச் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
கருவளையத்தை மறையச் செய்ய நாம் பேரீச்சம் பழத்தை பயன்படுத்தலாம். இரும்புச் சத்துக்கள் அதிகமாக இருக்கக் கூடிய பேரீச்சம் பழத்தை நாம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதே போல இதை சருமத்திற்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். அது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* பேரீச்சம் பழம்
* வெண்ணெய்
செய்முறை…
முதலில் பேரீச்சம் பழத்தில் உள்ள கொட்டைகளை எடுத்து களைந்து விட வேண்டும். பின்னர் இருக்கும் பேரீச்சம் பழங்களை இரண்டாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய பவுலில் பேரீச்சம் பழத்தின் பேஸ்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் நன்கு கலந்து விட்டு கண்களை சுற்றிவர பூசிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழிந்து கழுவி விடலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் மறைந்து விடும்.