பல் வலியை முற்றிலுமாக குறைக்க வேண்டுமா? இந்த Tooth Paste பயன்படுத்துங்க! 

Photo of author

By Sakthi

பல் வலியை முற்றிலுமாக குறைக்க வேண்டுமா? இந்த Tooth Paste பயன்படுத்துங்க!

 

அனைவருக்கும் பல் வலி ஏற்படுவது என்பது சாதாரணமான ஒன்று. நாம் சாப்பிடும் உணவுகளின் துகள்கள் நாள் முழுவதும் வாயினுள் ஒட்டி இருந்தால் அது கிருமிகளாக மாறும். மேலும் அந்த கிருமிகள் மெது மெதுவாக பற்களை அரிக்கத் தொடங்கும்.

 

இவ்வாறு அரிக்கத் தொடங்கும் பொழுது பற்கள் சொத்தையாகத் தொடங்கும். பின்னர் பல் வலி ஏற்படும். பின்னர் வலியை குறைக்க சொத்தை பற்களை எடுக்க வேண்டி வரும். அவ்வாறு சொத்தை பற்கள் ஏற்படாமல் இருக்க நாம் அனைவரும் நம்முடைய வாயை சரியாக சுத்தம் செய்ய வேண்டும்.

 

சரியான பல்பொடி அல்லது பற்பசை வைத்து பல் துலக்கினால் கிருமிகள் அனைத்தும் சாகும். அந்த காலத்தில் அனைவரும் வேப்ப மரத்தின் குச்சி, செங்கல், கரி இவற்றை எல்லாம் வைத்து பல் துலக்கி வந்தார்கள். அதனால் அவர்களின் பற்கள் அனைத்தும் வலிமையாக இருந்தது. மேலும் பற்களில் கரை இல்லாமல் வெள்ளையாக இருந்தது.

 

அனால் இந்த காலத்தில் பல் பொடியில் இருந்து பற்பசை வரை பற்களை சுத்தம் செய்ய தனித்தனியான சுவைகளில் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றது. இதிலும் நாம் பயன்படுத்தும் சில பல்பொடி அல்லது பற்பசைகளில் அதிக கெமிக்கல் கலந்திருப்பார்கள்.

 

அதனால் கூட சில சமயங்களில் பல் வலி ஏற்படும். எனவே இந்த பதிவில் பல் வலியை குறைக்க பயன்படும் இயற்கையான பற்பசை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

 

* பெருங்காயத்தூள்

* எலுமிச்சை சாறு

* உப்பு

 

செய்முறை:

 

ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

அதன் பின்னர் இதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவேண்டும். இதோ இயற்கையாக தயாரிக்கப்பட்ட பற்பசை. இதை வைத்து நாம் பல் துலக்கும் பொழுது வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும். மேலும் பல் வலி முற்றிலுமாக குணமாகி விடும்.