தலைவலி உடனே குணமாக வேண்டுமா? இப்படி பற்று போட்டால் போதும்! உடனே சரியாகும்! 

Photo of author

By Sakthi

தலைவலி உடனே குணமாக வேண்டுமா? இப்படி பற்று போட்டால் போதும்! உடனே சரியாகும்!
நம்மில் பலருக்கும் அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தலைவலி ஏற்படுகின்றது. இந்த தலைவலி ஏற்பட்டால் அனைவரும் செய்யும் பொதுவான செயல் என்னவென்றால் விதவிதமான தலைவலி மாத்திரை வாங்கி சாப்பிடுவது தான்.
மாத்திரைக்கு பதிலாக இயற்கை மருத்துவத்தில் தலைவலியை குணப்படுத்த பல சிகிச்சை முறைகள் இருக்கின்றது. அதில் ஒன்று குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்…
* இலவங்கம் – 2
* சுக்கு – சிறு துண்டு
* துளசி இலைகள் – ஐந்து அல்லது ஆறு
செய்முறை…
ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் எடுத்து வைத்துள்ள இலவங்கம், சுக்கு, துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த விழுதை நெற்றியில் பற்று போட வேண்டும். சிறிது நேரம் இதை அப்படியே விட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்தால் தலைவலி தானாக குணமாகும்.