முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? சின்ன வெங்காயம் போதும்!

0
356
#image_title

முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? சின்ன வெங்காயம் போதும்!

தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு மிகவும் பெரிய பிரச்சினையாக இருப்பது இந்த முடி உதிர்தல் மற்றும் நன்கு வளரவில்லை என்பதுதான்.

பொதுவாக தலையில் முடி உதிர்வதை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் நிறுத்த முடியாது. ஏனென்றால் குழந்தை பேரு அதற்கு பிறகு வயதாகுவது மற்றும் உடலில் சத்துக்கள் குறைவது. இது போன்ற நிறைய காரணங்கள் இருந்தாலும் சில பேருக்கு இப்படி முடி உதிர்கிறது என்று பயம் வந்துவிடும். நம் வீட்டில் சமையல் அறையில் இருக்கக்கூடிய ஒரு சின்ன பொருளை வைத்து இதற்கு தீர்வு காணலாம்.

சின்ன வெங்காயம் ஒரு காலத்தில் நம் உணவிற்கு அதிகமாக பயன்படுத்திக் கொண்டிருந்ததே இந்த சின்ன வெங்காயத்தை தான். ஏனென்றால் இதில் இருக்கக்கூடிய சல்பர். நம் தலையில் இருக்கக்கூடிய புண் ,பொடுகு, பேன் ,சொறி ,சிரங்கு எதுவாக இருந்தாலும் அடியோட நீக்கக்கூடிய தன்மை கொண்டது. மேலும் இந்த சின்ன வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

உங்களின் முடியின் அளவை பொறுத்து 10 அல்லது15 சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தோலை உரித்து விட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பிறகு நன்றாக பிழிந்து அதனுடைய சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயச் சாறுடன் தண்ணீர் சேர்க்கக்கூடாது.

உங்கள் அடி முடி வரைக்கும் இந்த சாற்றை நன்றாக தடவி விட வேண்டும். பிறகு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.மேலும் ஊற வைத்த பிறகு நல்ல ஷாம்பு போட்டு வாசனை இல்லாத அளவிற்கு கழுவி விட வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

Previous articleஉங்களுக்காக சூப்பர் பேஸ் மாஸ்க்! பார்லரே தேவையில்லை!
Next articleஇந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!