சருமம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா!! தினமும் தேங்காய் பால் குடிக்கலாம்!! இதனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!!

0
164

சருமம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா!! தினமும் தேங்காய் பால் குடிக்கலாம்!! இதனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!!

சருமம் பளபளவென்று ஜொலிக்க வேண்டும் என்றால் தினமும் நாம் தேங்காய் பால் குடிக்கலாம். மேலும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சாதாரணமாக தேங்காயை சாப்பிட்டாலே நமது உடலுக்கு தேவையான அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். எண்ணெய் சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கின்றது. மேலும் தேங்காயை சாப்பிடுவதால் மூட்டு வலி குணமாகின்றது. மேலும் தேங்காயில் நல்ல கொழுப்புகள் அதிக அளவில் உள்ளது.

அதே போல தேங்காயில் இருந்து பிரிக்கப்படும் தேங்காய் பாலிலும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. தேங்காயை போலவே தேங்காய் பாலிலும் நல்ல கொழுப்புகள் நிரம்பியுள்ளது. தேங்காய் பாலில் விட்டமின்கள், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது.

மேலும் இந்த தேங்காய் பாலில் புரதச்சத்து, மாவுச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் ஆகிய உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காய் பாலில் உள்ளது.

தேங்காய் பாலை தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…

* தேங்காய் பாலை தினமும் குடிப்பதால் அல்சர் என்று அழைக்கப்படும் வயிற்றுப் புண் குணமாகும்.

* தேங்காய் பாலை தினமும் குடித்து வந்தால் அல்சர் காரணமாக ஏற்படும் வாய்ப்புண் ஆறிவிடும்.

* தேங்காய் பாலை தினமும் குடிப்பதால் சருமத்தில் பளபளப்புத் தன்மை அதிகரிக்கும். மேலும் சருமத்தில் பொலிவு ஏற்படும்.

* உடலில் தேவையில்லாத நச்சுக்கள் அனைத்தும் நீங்க தினமும் நாம் தேங்காய் பாலை குடிக்கலாம்.

* கீழ்வாத பிரச்சனை இருப்பவர்கள் தினமும் தேங்காய் பால் குடித்து வந்தால் கீழ்வாத பிரச்சனை குணமாகத் தொடங்கும்.

* தேங்காய் பாலில் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் தேங்காய் பாலை தினமும் குடித்தால் எலும்புகள் உறுதியாகும்.

* செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் தேங்காய் பால் குடித்து வந்தால் செரிமானப் பிரச்சனை குணமாகும். மேலும் செரிமான மண்டலம் பலப்படும்.

* தேங்காய் பாலை தினமும் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

Previous articleதினமும் நீங்கள் தலைக்கு குளிப்பவர்களா!! அப்போ இந்த பாதிப்புகள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்!!
Next articleபாதத்தில் வெடிப்புகள் மறைய!! சில எளிமையான வீட்டு வைத்திய முறைகள்!!