உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா? அப்போ பேரீச்சம்பழத்தை இப்படி டிரை பண்ணுங்க!
பொதுவாக அனைவருக்கும் உடலில் இரத்தம் அதிகமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு 12.1ல் இருந்து 15.1 ஆகவும் ஆண்களுக்கு 13.8ல் இருந்து 17.2 ஆகவும் இரத்தத்தின் அளவு இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு கீழ் சென்றால் இரத்த சோகை நோய் போல பலவிதமான நாய்கள் நமக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எப்பொழுதும் நம்முடைய உடலில் இரத்தத்தின் அளவை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இரத்தத்தின் அளவு குறையாமல் இருக்க தேவையான பழங்கள் மற்றும் அதற்கு தகுந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அதில் ஒன்று பேரீச்சம்பழம். பேரீச்சம்பழத்தில் உடலுக்குத் தேவையான பலவிதமான நன்மைகள் இருக்கின்றது. இந்த பேரீச்சம்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டாலே உடலில் பாதி பிரச்சனைகள் குணமாகும். ஆனால் ஒரு சிலருக்கு பேரீச்சம்பழம் பிடிக்காது. அவர்கள் அனைவரும் பேரீச்சம்பழத்தில் மில்க் ஷேக் தயார் செய்து குடிக்கலாம். இதன் மூலமும் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம். தற்பொழுது பேரீச்சம்பழ மில்க் ஷேக் எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* பேரீச்சம் பழம் – 5
* பால்(காய்ச்சியது) – 1 பெரிய டம்ளர் அளவு
* சர்க்கரை – ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் தேவையான அளவு பாலை காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 5 பேரீச்சம் பழத்தை சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் எடுத்து வைத்துள்ள பாலில் கால் டம்ளர் அளவு மிக்சி ஜாரில் சேர்த்து ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதை நன்கு மை போல அரைத்து மீதம் இருக்கும் பாலையும் மிக்சி ஜாரில் சேர்த்து 30 நொடிகள் வரை அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதை ஒரு டம்ளரில் ஊற்றி குடிக்கலாம். இதன் மூலம் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதோடு மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.