வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ இந்த பானங்கள் ட்ரை பண்ணுங்க! 

Photo of author

By Sakthi

வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ இந்த பானங்கள் ட்ரை பண்ணுங்க!!
நம்முடைய வயிற்றை நோய் கிருமிகள் தாக்காமல் நோய் கிருமிகள் தங்காமல் இருக்க உதவி செய்யும் ஆறு வகையான பானங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாம் நம்முடைய வயிற்றை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சாதாரணமாக தண்ணீரை மட்டும் அதிகமாக குடித்தால் போதும். தண்ணீர் குடிப்பதால் வயிற்றை சுத்தப்படுத்துவது மட்டுமில்லாமல் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும். அனைவரும் ஒரு நாளைக்கு 6 முதல் 8 கிளாஸ் தண்ணீரை குடிக்க வேண்டும். இது நம்முடைய பெருங்குடலை சுத்தமாக்கி விடும். தற்பொழுது வயிற்றை சுத்தப்படுத்தும் 6 வகையான பானங்கள் பற்றி பார்க்கலாம்.
வயிற்றை சுத்தப்படுத்தும் பானங்கள்:
* உப்பு நீர்
* எலுமிச்சை மற்றும் தேன் கலந்த நீர்
* தர்பூசணி பழச்சாறு
* தயிர்
* தக்காளிச் சாறு
* மூலிகை தேநீர்
உப்பு நீர்:
உப்பு நீர் என்றால் சாதாரணமாக வரும் உப்புத் தண்ணீர் கிடையாது. வெதுவெதுப்பான நீர் ஒரு டம்ளர் அளவு எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் கடல் உப்பு அல்லது இரண்டு ஸ்பூன் இளஞ்சிவப்பு உப்பு சேர்த்து கலந்து விட்டு வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம். இதனால் பெருங்குடலின் இயக்கம் தூண்டப்படுகின்றது. மேலும் வயிறு சுத்தமடையும்.
எலுமிச்சை மற்றும் தேன் கலந்த நீர்:
ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி தேன், சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வயிறு சுத்தமாகும்.
தர்பூசணி பழச்சாறு:
நாம் தர்பூசணி ஜூஸ் குடித்தால் நம்முடைய வயிறு சுத்தமாவது மட்டுமில்லாமல் நம்முடைய உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளலாம். தர்பூசணி ஜூஸ் குடிப்பதால் செரிமானம் சீராகும். அது மட்டுமில்லாமல் தர்பூசணி பழச்சாறு நம்முடைய பெருங்குடலை சுத்தம் செய்கின்றது.
தயிர்:
தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளது.  தயிரை சாப்பிட்டு வந்தால் பெருங்குடல் சுத்தமடைகின்றது. மேலும் தயிர் சாப்பிடுவதால் நம்முடைய குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கின்றது. வயிறை சுத்தப்படுத்த தயிரை சாப்பிடலாம்.
தக்காளிச் சாறு:
தக்காளியில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. எனவே தக்காளியை ஜூஸ் செய்து குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கின்றது. இதனால் உடல் நீரேற்றத்துடன் இருக்கும். மேலும் தக்காளி ஜூஸ் வயிற்றில் நோய்க் கிருமிகள் தங்கவிடாமல் சுத்தப்படுத்துகின்றது.