பிரியங்கா சோப்ரா ஓட காதல் கதைய தெரிஞ்சுக்கணுமா!! இவங்கள விட அவங்க ஹஸ்பண்டுக்கு பத்து வயசு கம்மியாம்!!

0
143
Want to know Priyanka Chopra's love story to run? Husband is ten years younger than them !!
Want to know Priyanka Chopra's love story to run? Husband is ten years younger than them !!

பிரியங்கா சோப்ரா ஓட காதல் கதைய தெரிஞ்சுக்கணுமா!! இவங்கள விட அவங்க ஹஸ்பண்டுக்கு பத்து வயசு கம்மியாம்!!

பிரியங்கா சோப்ரா இவர் ஒரு ஹிந்தி நடிகை மற்றும் இவர் உலக அழகி பட்டத்தை வென்றவர். இவர் திரை உலகிற்கு வருவதற்கு முன்பு மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார். பிரியங்கா சோப்ரா முதல் முதலில் தமிழ் திரைப்படமான தமிழன் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும் அடுத்த ஆண்டில் அணில் தனது பாலிவுட் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதன் பிறகு இவர் பல விருதுகளையும் வென்றார். பிரியங்கா சோப்ரா தனது குழந்தை பருவத்தை பல ஊர்களில் கழித்துள்ளார். அவரது தந்தை ராணுவத்தில் இருந்ததால் அவரின் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது. அவரது தந்தை பாரெய்லியில் வசிக்கும் கத்திரி  சமூகத்திலிருந்து வந்தவர். அவரது தாய் ஜம்ஷ்ட்பூரில் வசிக்கும் மலையாள குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருக்கு அவரைவிட 7 வயதில் சிறியவராக சித்தார்த் என்ற ஒரு சகோதரரும் இருக்கிறார்.

இந்த நிலையில் இவர் 2018 ஆம் ஆண்டு தனது காதலனான நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் அமெரிக்காவில் ஹாலிவுட்ல் நடிகர் மற்றும் பாடகனாக உள்ளார். மேலும் நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ராவை விட பத்து வயது சிறிய பையனாக இருந்தார். திருமணத்திற்குப் பிறகு அவரது கணவரான நிக் ஜோனஸ் உடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபலமானவர். இதனால் இவரின் திருமண கதை வெளிச்சத்திற்கு வந்தது. உடனே இவரின் ரசிகர்கள் தன்னை விட 10 வயது சிறுவன் ஆகிய நிக் ஜோனஸ் குழந்தை திருமணம் செய்துவிட்டார் என்று வலை தளங்களில் கிண்டல் செய்து வந்தனர். மேலும் இவர் திருமணம் செய்து கொண்டது குறித்து சுயசரிதை ஒன்றையும் வெளியிட்டார். அதில் விருது வழங்கும் விழாவிற்கு பிறகுதான் நானும் நிக்கும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். நீக்கை காதலிக்க முதலில் தயங்கினேன். தன்னை விட பத்து வயது சிறிய காதலனை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று பல கேள்விகள் என் மனதில் இருந்தது. ஆனால் நிக்கை திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஒருவனாக இருக்க ஆசைப்பட்டேன். அவருக்கு அப்பொழுது 25 வயது எனக்கு 35 வயது. அதனால் இவ்வளவு சிறிய வயதான நிக் விரைவில் செட்டிலாக விரும்பமாட்டார் என்று நினைத்தேன்.

ஆனால் முதல் முதலாக இந்தியாவுக்கு நிக்குடன் வந்த பொழுது நிக் என் அம்மா உடன் வெளியே சென்றார். அது ஒரு மதிய வேலை. மதிய உணவு சாப்பிட அவரும் என் அம்மாவும் ஓட்டலுக்கு சென்று இருந்தனர். எனக்கு ஒரு வேலை இருந்ததால் நான் அவர்களுடன் செல்லவில்லை. ஆனால் எனக்கு அங்கு எந்த வேலையையும் செய்யவே மனம் இல்லை. நிக் ஏன் அம்மாவை மட்டும் தனியாக அழைத்து செல்ல வேண்டும்? அவர் அம்மாவிடம் என்ன சொல்லியிருப்பார்? என்று மனதில் பல கேள்விகள் எழுந்தது. நான் ஒரு மீட்டிங்கில் இருந்தேன் என்னை சுற்றி இருபதுக்கு மேல் நபர்கள் இருந்தனர். ஆனால் எனக்கு நீக் மற்றும் அம்மாவை பற்றிய நினைவுதான் மனதில்  ஓடிக்கொண்டிருந்தது. இதையடுத்து என் பாதுகாப்பு குழுவில் இருக்கும் ஒருவரை அனுப்பி நிக் மற்றும் அம்மாவை பின் தொடருமாறு அனுப்பினேன். அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் உரையாடுவதை புகைப்படம் எடுக்க சொன்னேன். அந்த புகைப்படத்தை வைத்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடித்துக் கொள்ளலாம் என்று நினைத்து. என் பாதுகாப்புக் குழுவிலிருந்து  அனுப்பிய அவர் அந்த புகைப்படத்தை எடுத்து வந்து கொடுத்த பின்புதான் எனக்கு தெரிந்தது. நிக் எனது அம்மாவிடம் உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதற்கு அனுமதி கொடுப்பீர்களா என்று கேட்டுள்ளார். என்பது அந்த வீடியோ காட்சியை பார்த்த பின்புதான் எனக்கு தெரிய வந்தது. அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் சம்மதத்தில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்று அவரின் அழகிய காதல் கதையை கூறியுள்ளார்.

Previous articleஒரு குட் நியூஸ்., விடுமுறை நாட்களில் இனி எப்போதும் இது உண்டு!! நிர்வாகம் சார்பாக அறிவிப்பு!!
Next articleஇந்தியாவில் நேற்றை விட உயர்ந்தது கொரோனா பாதிப்பு!! சுகாதார துறை அறிக்கை!! மீண்டும் உயருமா??