உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? பூண்டை இப்படி சாப்பிடுங்க! 

Photo of author

By Sakthi

உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? பூண்டை இப்படி சாப்பிடுங்க!
உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்கள் அவர்களுடைய அதிகப்படியான உடல் எடையை வைத்துக் கொண்டு படாதபாடு படுவார்கள். மேலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பல வகையான முயற்சிகளை எடுப்பார்கள்.
அதாவது ஜிம் செல்வது, டயட் இருப்பது, பலவித மருந்துகளை உட்கொள்வது, மூலிகை மருந்துகளை உட்கொள்வது, நடைபயிற்சி என்று பல முயற்சிகளை மேற் கொள்வார்கள். என்ன செய்தாலும் பலன் இருக்கும். ஆனால் இருக்காது. இந்த பதிவில் பூண்டை வைத்து உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
பூண்டு இயற்கையாகவே மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள். இந்த பூண்டை வைத்து நாம் வாயுத் தொல்லையை சரி செய்யலாம். அதே போல உடல் எடையை குறைக்கவும் பயன்படுத்தலாம். பூண்டில் அல்லிசின் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க செய்யும். இந்த பூண்டை மேலும் ஒரு பொருளுடன் சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்கலாம். அது என்ன பொருள் எவ்வாறு சாப்பிடுவது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* தேன்
* பூண்டு
செய்முறை:
முதலில் 15 பல் பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு. கண்ணாடி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கண்ணாடி ஜாரில் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கண்ணாடி ஜாரில் பூண்டு பற்கள் அனைத்தும் மூழ்கும் அளவுக்கு தேன். சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் இதை மூடி வைத்து விடவேண்டும். இரண்டு நாட்கள் கழிந்து நன்கு ஊறிய பின்னர் இதை சாப்பிடலாம். இதை பிரிட்ஜ்ஜில் வைத்து தினமும் காலை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறையத் தொடங்கும்.