தங்கம் போல முகம் பளபளப்பாக மாற வேண்டுமா? அப்போ கோதுமை மாவு மட்டும் போதும்! 

Photo of author

By Sakthi

தங்கம் போல முகம் பளபளப்பாக மாற வேண்டுமா? அப்போ கோதுமை மாவு மட்டும் போதும்!

பொலிவு இழந்து இருக்கும் உங்களுடைய முகத்தை தங்கம் போல பளபளப்பாக மாற்ற கோதுமை மாவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களுடைய முகத்தை அழகாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அதற்காக பலவகையான மேக்கப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவை அனைத்தையும் தொடர்ந்து பயன்படுத்தினாலும் பயன்படுத்துவதை நிறுத்தினாலும் சருமத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

பெண்கள் பயன்படுத்தும் சில மேக்கப் பொருட்களால் முகத்தில் முகப்பருக்கள், முகச் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் என்று சருமம் தொடர்பான பல நோய்கள் ஏற்படும். அவ்வாறு நோய்கள் ஏற்படாமல் இருக்க நாம் செயற்கையாக பல கெமிக்கல்கள் கலந்து தயாரிக்கப்படும் மேக்கப் சாதனங்களை பயன்படுத்தாமல் இயற்கையான வைத்திய முறைகளை நாம் பயன்படுத்தலாம். அந்த வகையில் முகத்தை இயற்கையாக எவ்வாறு. பளபளப்பாக மாற்றுவது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு

* காபி பொடி

* எலுமிச்சை சாறு

செய்முறை:

முதலில் ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் கோதுமை மாவு சிறிதளவு காபி பொடி சிறிதளவு சேர்த்துக் கொள்ளவேண்டும். பின்னர் இதை நன்கு கலந்து விட்டு. இதில் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த கலவையை முகம் முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழிந்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும். மற்றும் முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் கூட மறையும்.