நகை மற்றும் பணம் பெருக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடியை வைத்து பாருங்கள்!

0
328

நகை மற்றும் பணம் பெருக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடியை வைத்து பாருங்கள்!

 

 

அனைவரின் வீட்டிலும் கண்ணாடி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக கருதப்படுகிறது. அந்தக் கண்ணாடியை நம் வீட்டில் எந்த இடத்தில் வைத்தால் பணம் பெருகும் என்பதை அறிந்து கொள்ளலாம். கண்ணாடி என்பது அஷ்ட மங்கல பொருட்களில் ஒன்றாகும். மேலும் மகாலட்சுமிக்கு பிடித்த பொருளாக கண்ணாடி கருதப்படுகின்றது. இவ்வாறான இந்த கண்ணாடியை கோவிலின் மூலவரின் நேர் எதிரில் வைக்கப்பட்டிருக்கும். பூஜை அறை என்றாலே அதில் கண்ணாடி என்பது நிச்சயமாக இருக்க வேண்டும். அப்படி செய்தால் குலதெய்வ அருள் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களை அழிக்க உதவுகின்றது.

அவ்வாறு பூஜை அறையில் வைக்கப்படும் கண்ணாடி மேற்கு திசை நோக்கி இருந்தால் நேர்மறை எண்ணங்கள் தோன்றும். மேலும் குறிப்பாக பூஜை அறையில் வைத்துள்ள கண்ணாடியை நாம் பயன்படுத்தக் கூடாது அதில் கடவுளின் படங்கள் மட்டுமே பிரதிபலிக்க வேண்டும். அடுத்ததாக நாம் வீட்டின் ஹாலில் மேற்கு அல்லது தெற்கு திசையை நோக்கி கண்ணாடியை வைக்க வேண்டும். அதன் பிறகு  குளியல் அறையில் கண்ணாடி வைத்தால் நல்லது. அவ்வாறு வைக்கப்படும் கண்ணாடி வடக்கு நோக்கி அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். அடுத்ததாக படுக்கை அறையிலும் கண்ணாடி வைக்கலாம்.

அப்படி வைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் நம்முடைய உருவம் தெரியாதவாறு வைக்க வேண்டும். அவ்வாறு நம் உருவம் தெரிந்தால் நமக்கு எண்ணற்ற நோய்கள் உண்டாகும் என்பது ஐதீகம். அதனையடுத்து எந்த ஒரு இடத்திலும் எதிரெதிரே கண்ணாடி என்பது இருக்கக் கூடாது. வைக்கப்படும் கண்ணாடி என்றாலே அவை சதுர வடிவில் மட்டுமே இருக்க வேண்டும். வட்ட வடிவம் முக்கோணம் போன்ற வடிவங்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

Previous articleபரவும் சோவா வைரஸ்:! போன் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுதிருக்கும் வங்கிகள்!!
Next articleதேர்வே இல்லாமல் மாதம் ரூ.20000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்