இதயத்தை ஆபத்தில் இருந்து பாதுகாக்க வேண்டுமா? அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க! 

Photo of author

By Sakthi

இதயத்தை ஆபத்தில் இருந்து பாதுகாக்க வேண்டுமா? அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!
நம்முடைய இதயத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் கட்டாயம் ஒருசில உணவுகளை சாப்பிட வேண்டும். அதே போல ஒரு சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகள், துரித உணவுகள் ஆகியவை சுவையாக இருந்தாலும் இவற்றை நாம் சாப்பிடக் கூடாது. இந்த உணவுகள் எல்லாம் இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய உணவுகள் ஆகும். இந்த உணவுகளை எல்லாம் தவிர்த்து இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடிய உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். அது என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடிய 5 உணவுகள்…
1. பெர்ரி பழங்கள்
இதயத்தை ஆபத்தில் இருந்து பாதுகாக்க நாம் பெர்ரி பழங்களை சாப்பிடலாம். பெர்ரி பழங்களில் ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. பெர்ரி பழங்களை சாப்பிடுவதால் நம் உடலில் சில அழற்சிகள் குறையும்.
2. அவகேடோ
இதயத்தை ஆபத்திலிருந்து பாதுகாத்து ஆரோக்கியத்தை அதிகரிக்க நாம் அவகேடோ பழத்தை சாப்பிடலாம். அவகேடோ பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. மேலும் நல்ல கொழுப்புச் சத்துக்கள் உள்ளது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகின்றது. இதனால் இதயம் ஆரோக்கியம் மேம்படும்.
3. டார்க் சாக்லேட்
இதயத்தை பாதுகாக்க நாம் டார்க் சாக்லேட் சாப்பிடலாம். இந்த டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. இதை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
4. பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளை நாம் சாப்பிடுவதன் மூலமாக இதயத்தை நோய்களில் இருந்து பாதுகாக்கலாம். பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் வலிமைபடும்.
5. வால்நட்
இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆபத்திலிருந்து பாதுகாக்க நாம் வால்நட் சாப்பிடலாம். வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருக்கின்றது. வால்நட் சாப்பிடுவதால் நம்முடைய உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைகின்றது.