நீளமாக மென்மையான கூந்தலை தான் இன்றுள்ள பெண்கள் விரும்புகின்றனர்.தலை முடி சுருளாக இருந்தால் அது தங்கள் அழகை கெடுத்துவிடும் என்று கருதி கெமிக்கல் க்ரீம்,ட்ரீட்மெண்ட் மூலம் தலை முடியை நேராக மாற்றுகின்றனர்.
இதனால் முடி உதிர்தல் மற்றும் முடியின் ஆரோக்கியம் பாதிக்கக் கூடும்.எனவே சுருள் முடியை நேராக மாற்ற வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்துங்கள்.இதனால் எந்தஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது.
தேவையான பொருட்கள்:-
1)முட்டை – ஒன்று
2)ஆலிவ் ஆயில் – 50 மில்லி
செய்முறை:-
முதலில் ஒரு முட்டையை உடைத்து அதில் இருக்கும் வெள்ளை கருவை கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு அதில் 50 மில்லி ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.இப்பொழுது வெள்ளை கரு மற்றும் ஆலிவ் ஆயில் ஒன்றுடன் ஒன்று சேர்த்து நுரைபோல் காட்சி தரும்.
இதை தலை முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.பிறகு ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும்.இப்படி செய்தால் சுருள் முடி நேராகும்.
தேவையான பொருட்கள்:-
1)கற்றாழை – ஒன்று
2)வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை:-
கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி நாள் முழுவதும் ஊறவிடவும்.
பிறகு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.இதை மிக்சர் ஜாரில் சேர்த்து போட்டு அரைக்கவும்.
அதற்கு அடுத்து ஊறவைத்த வெந்தயத்தை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தலை முழுவதும் அப்ளை செய்யவும்.
ஒரு மணி கழித்து குளிர்ந்த நீரில் தலையை அலசி சுத்தம் செய்யவும்.இப்படி வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் சுருள் முடி நேராகும்.