குறைவான கட்டணத்தில் MBBS படிக்க வேண்டுமா? உங்களுக்கு தான் இந்த தகவல்!!

Photo of author

By Rupa

இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு MBBS படிக்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கிறது.ஆனால் மற்ற துறைகள் போல் அல்லாமல் மருத்துவத்துறையில் சேர்ந்து படிக்க அதிக கட்டணம் தேவைப்படும்.இதனால் பலருக்கு டாக்டர் கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது.

இந்தியாவில் டாக்டர் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்ச்சி பெற்றாலும் அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்குமா என்பது கேள்விகுறி தான்.காரணம் அரசு கல்லூரிகளில் குறைவான இடங்களே ஒதுக்கப்படுகிறது.இதனால் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் சீட் கிடைப்பதில்லை.

இதனால் மாணவர்கள் தங்கள் டாக்டர் கனவு நிறைவேற தனியார் கல்லூரிகளை நாட வேண்டிய நிலை உள்ளது.ஆனால் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை மாணவர்களுக்கு டாக்டர் கனவு கனவாகவே போய்விடுகிறது.ஆனால் சில நாடுகளில் குறைந்த கட்டணத்தில் MBBS படிக்க முடியும்.

வெளிநாட்டினர் குறைவான செலவில் மருத்துவம் படிக்க தேர்வு செய்யும் முதல் நாடு ஜெர்மனி.நீங்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை வைத்து அந்நாட்டில் உள்ள மருத்துவ கலோரிகளில் சேர்ந்து படிக்கலாம்.ஜெர்மனியில் குறைவான கட்டணத்தில் மருத்துவம் படிக்க ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம்,ஹாம்பர்க் போன்ற பல்கலைக்கழகங்களை தேர்வு செய்யலாம்.இங்கு ஆண்டு கட்டணம் ரூ.6,00,000க்குள் இருக்கும்.

2)ரஷ்யா

இந்திய மாணவர்கள் பெருமபாலானோர் ரஷ்யாவில் உள்ள குர்க்ஸ் மாநில மருத்துவ பல்கலைகழகத்தில் சேர்ந்து படிக்க விரும்புகின்றனர்.இங்கு சேர்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இங்கு மருத்துவம் படிக்க ரூ.30,00,000 வரை செலவாகும்.

3)கஜகஸ்தான்

இந்நாட்டில் மருத்துவம் படிக்க 12 ஆம் வகுப்பில் குறைந்தது 50% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.இங்கு மருத்துவம் பயில ரூ.25,00,000 வரை செலவாகும்.

4)பிலிப்பைன்ஸ்

இங்கு வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வு மூலம் மருத்துவ சேர்க்கை நடைபெறுகிறது.5.5 முதல் 6.5 ஆண்டுகளில் மருத்துவ படிப்பு முடிகிறது.இந்நாட்டில் மருத்துவம் படிக்க குறைந்தபட்ச வயது தகுதி 17 ஆகும்.அதிகபட்ச வயது தகுதி 25 ஆகும்.இங்கு மருத்துவம் பயில ரூ.20,00,000 வரை செலவாகும்.

5)சீனா

இந்நாட்டில் MBBS படிப்பு 6 ஆண்டுகளில் முடிகிறது.இந்நாட்டில் மருத்துவம் படிக்க குறைந்தபட்ச வயது தகுதி 17 ஆகும்.இங்கு மருத்துவம் பயில ரூ.30,00,000 வரை செலவாகும்.