நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டுமா? உடனடியாக உப்பில் இந்த இரண்டு பொருட்களை வைத்து பாருங்கள்!

0
453

நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டுமா? உடனடியாக உப்பில் இந்த இரண்டு பொருட்களை வைத்து பாருங்கள்!

 

நீங்கள் எடுத்த காரியம் வெற்றி பெற உப்பு ஜாடையில் இந்த பொருட்களை மட்டும் வைத்தால் போதும். அவை என்ன பொருட்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். கல்லுப்பு என்பது மகாலட்சுமி வாசம்  செய்யும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. சம்பளம் வாங்கியதும் அந்த சம்பளத்தில் முதலில் வாங்க வேண்டிய பொருள் கல் உப்பு. சமையலறையில் எப்பொழுதுமே கல் உப்பு வற்றாமல் இருக்க வேண்டும். கல் உப்பு எதிர்மறை எண்ணங்கள் உருவாகாமல் இருக்க உதவுகின்றது.

முதலில் புதிய கல் உப்பை வாங்கிக் கொள்ள வேண்டும். சமையலறையில் பயன்படுத்தும் கல் உப்பை பயன்படுத்த கூடாது. இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமையில் மட்டுமே செய்ய வேண்டும். வளர்பிறை தேய்பிறை என இரண்டு நேரங்களிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை உள்ள சுக்கிர ஹோரையில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

 

இரண்டு விரலி மஞ்சள் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வசம்பு துண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். உப்பு ஜாடியில் பாதி அளவு உப்பை நிறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் இரண்டு துண்டு விரலி மஞ்சள் ஒரு துண்டு வசம்பு வைக்க வேண்டும். அதன் பிறகு அதன் மேல் மீதமுள்ள கல் உப்பை நிறைக்க வேண்டும். அதனை சமையலறை அல்லது பூஜை அறையில் மறைவான அல்லது ஓரமான ஒரு பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாரத்திற்கு அந்த ஜாடியை தொடவோ திறக்கவோ கூடாது. அதனை எடுத்து வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக அளவு கண் திருஷ்டி இருக்கின்றது என எண்ணினால் நாம் வைத்துள்ள உப்பு ஜாடியில் இருந்து சிறிதளவு அந்த உப்பை எடுத்து சுற்றி போடலாம்.

இவ்வாறு வைத்துவிட்டு ஒரு வாரம் கழித்து அடுத்ததாக வரும் வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணி முதல் ஏழு மணி வரை உள்ள சுக்கிர ஹோரையில் அந்த ஜாடியை எடுத்து வசம்பு மற்றும் விரலி மஞ்சள் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த கல்லுப்பை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கரைத்து அதனை நாம் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்ற வேண்டும். அதன் பிறகு நாம் எடுத்து வைத்துள்ள விரலி மஞ்சள் மற்றும் வசம்பை நீர் நிலைகளில் போட வேண்டும். இதன் பிறகு 48 நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் எடுத்த காரியம் வெற்றி பெறும்.

 

Previous articleகற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!
Next articleOla Uber Rapido நிறுவனங்களுக்கு தடை:! அரசின் அதிரடி உத்தரவு!!