கருப்பான உதடு பிங்க் நிறத்திற்கு மாற வேண்டுமா? அப்போ எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

கருப்பான உதடு பிங்க் நிறத்திற்கு மாற வேண்டுமா? அப்போ எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Divya

உங்கள் கருப்பு உதடு அழகான பிங்க் நிறத்திற்கு மாற இங்கு சொல்லப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள்.

உதடுகள் கருப்பாக மாற காரணங்கள்:

**புகைப்பழக்கம்
**காபி,டீ அதிகம் பருகுதல்
**சூடான உணவுகள்
**கெமிக்கல் பொருட்கள் பயன்பாடு

கருப்பு உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்றும் குறிப்புகள்:

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சம் பழம் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

நீங்கள் உங்கள் உதட்டை சிவப்பாக மாற்ற விரும்பினால் அதற்கு எலுமிச்சை சிறந்த தீர்வாக இருக்கும்.நீங்கள் ஒரு சிறிய அளவு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதை கத்தி கொண்டு வட்ட வடிவில் மெல்லியதாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை வாயில் வைத்து கடியுங்கள்.இப்படி செய்தால் உதட்டில் எலுமிச்சை சாறு படும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடுகளில் உள்ள கருப்பு நிறம் மறையும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை – ஒன்று
2)வெள்ளை சர்க்கரை – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து வட்ட வடிவில் நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு அதில் வெள்ளை சர்க்கரை சிறிதளவு சேர்த்து பரப்பிவிட வேண்டும்.

பிறகு இந்த எலுமிச்சையை உதடுகள் மீது வைத்து தேய்க்க வேண்டும்.இதை தொடர்ந்து தினமும் இரவு நேரத்தில் செய்து வந்தால் உதடுகள் மீதுள்ள கருமை மறையும்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி – ஒரு பீஸ்
2)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு தக்காளியை வட்ட வடிவில் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை பரப்பி உதடுகள் மீது வைத்து தேய்க்க வேண்டும்.இந்த மாதிரி தினமும் செய்து வந்தால் உதடுகள் மீதுள்ள கருமை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு சிறிய அளவு பீட்ரூட்டை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டில் சிறிது தேன் சேர்த்து உதடுகள் மீது தடவி வந்தால் கருமை நீங்கி பிங்க் நிறம் கிடைக்கும்.