70 வயதிலும் சுருக்கம் இல்லாத சருமம் வேண்டுமா? இந்த பொடியை நீரில் கலந்து குடியுங்கள்!!

Photo of author

By Divya

பெரும்பாலான மக்கள் சந்தித்து வரும் பிரச்சனையாக தோல் சுருக்கம் உள்ளது.முதுமை காலத்தில் தான் தோல் சுருக்கம் ஏற்படும்.ஆனால் இன்று நாம் வாழ்ந்து வரும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் இளம் வயதிலேயே வயதான தோற்றத்தை கண்டு விடுகின்றோம்.

முகத்தை அழகாக மாற்ற ஆபத்து நிறைந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்துவதால் இளமை காலத்திலேயே சருமப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.இதை ஆரம்ப நிலையில் தடுத்துக் கொள்வது சருமத்திற்கு நல்லது.

தேவையான பொருட்கள்:

1)பாசி பருப்பு
2)வேர்க்கடலை
3)பாதாம் பருப்பு
4)ஓட்ஸ்
5)சூரியகாந்தி விதைகள்
6)ஆளி விதை
7)சியா விதைகள்
8)நெல்லிக்காய் பொடி
9)அதிமதுரம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் பாசி பருப்பு சேர்த்து வாசனை வரும் வரை மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கப் ஓட்ஸை அதில் போட்டு ஒரு நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.அதேபோல் 10 கிராம் வேர்க்கடலை,10 கிராம் பாதாம் பருப்பு,10 கிராம் சூரியகாந்தி விதைகள்,10 கிராம் ஆளி விதை,10 கிராம் சியா விதை,ஒரு துண்டு அதிமதுரம் மற்றும் 10 கிராம் நெல்லிக்காய் வற்றல் சேர்த்து மிதமான தீயில் வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் கொட்டி ஸ்டோர் செய்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்களுக்கு சூடாக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு மாற்றி அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கலக்கி குடித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கி பொலிவான சருமத்தை பெற முடியும்.