முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா? இந்த இரண்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள்! 

0
215
Want wrinkles on your face to disappear? Use only these two ingredients!
Want wrinkles on your face to disappear? Use only these two ingredients!
முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா? இந்த இரண்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள்!
முகத்தில் இருக்கும் சுருக்கங்களை மறையச் செய்ய பலரும் அவரவர்களுக்கு தெரிந்த வைத்திய முறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலர் பல வகையான ரசாயனங்கள் கலந்த மருந்துப் பொருட்களையும், அழகு சாதனப் பொருட்களையும் முகத்திற்கு பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ரசாயனங்கள் அதிகம் கலக்கும் பொருட்களை பயன்படுத்தும் பொழுது முகத்தில் வேகமாக சுருக்கங்கள் மறைகின்றதோ இல்லையோ அதைவிட வேகமாக பின்விளைவுகளை வந்து விடும். இந்த பதிவில் வெறும் இரண்டு பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு முகத்தில் உள்ள சுருக்கங்களை மறையச் செய்வது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* தேன்
* விட்டமின் ஈ கேப்சியூல்
செய்முறை:
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு தேன் சேர்க்கவும். பின்னர் அதில் விட்டமின் ஈ கேப்சியூலில் உள்ள எண்ணெயை மட்டும் சேர்க்கவும். பின்னர் இரண்டையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழிந்து கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைவு மட்டுமில்லாமல் கரும்புள்ளிகள், முகப்பருக்கள், வழக்கங்கள் ஆகியவையும் மறையும். இதை இரவில் தூங்கச் செல்லும் முன்பு பயன்படுத்த வேண்டும்.
இதில் தேன் சேர்க்கப்பட்டுள்ளதால் நம்முடைய முகத்திற்கு ஈரப்பதம் கிடைக்கின்றது. தேனில் உள்ள ஆன்டிபாக்டீரியல் சத்துக்கள் நம்முடைய முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் பருக்களை நீக்க உதவியாக இருக்கும்.
Previous articleKerala Recipe: ஆரோக்கியம் நிறைந்த வெந்தய கீரையில் சுவையான பொரியல் செய்வது எப்படி?
Next articleஜாப் அலர்ட்: திருச்சி NIT-ல் கை நிறைய சம்பளத்தில் வேலை!! இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்!