குளிர்காலத்தில் உங்கள் முகம் பால் போல் மிருதுவாக இருக்க ஆசையா? இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

பனி காலத்தில் சரும வெடிப்பு,உதடு வெடிப்பு,தோல் எரிச்சல் பல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.இதில் இருந்து சருமத்தை காத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)சந்தனப் பொடி
2)மஞ்சள் தூள்
3)காய்ச்சாத பால்
4)கடலை மாவு

செய்முறை விளக்கம்:-

*ஒரு கிண்ணத்தில் சந்தனப் பொடி ஒரு தேக்கரண்டி மற்றும் மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி போட்டு நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

*பிறகு ஒரு தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து கலக்கவும்.அடுத்து காய்ச்சாத பசும் பால் ஐந்து தேக்கரண்டி அளவு ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலந்து முகத்திற்கு பூசி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.பிறகு வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவிவினால் முகப்பொலிவு அதிகரிக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)சந்தன பொடி
2)அதிமதுரப் பொடி
3)கடலை மாவு
4)தேன்
5)முல்தானி மெட்டி

செய்முறை விளக்கம்:-

*ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடி,ஒரு தேக்கரண்டி அதிமதுரப் பொடி,ஒரு தேக்கரண்டி கடலை மாவு மற்றும் ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

*பிறகு அதில் மூன்று தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து முகத்திற்கு அப்ளை செய்யுங்கள்.

*இதை அரை மணி நேரத்திற்கு உலரவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)ரோஸ் வாட்டர்

செய்முறை விளக்கம்:-

பிரஸ் கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் போட்டு கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து வந்தால் முக வறட்சி நீங்கி பொலிவுபெறும்.