உங்கள் முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா!! அப்போ இரவில் இதை செய்யுங்க!!
முகம் பளபளப்பாக இருக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். முகத்தின் அழகு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. அதை பாதுகாக்க பல வகையான வழிமுறைகளை நாம் பின்பற்றுகிறோம்.
ஆண்களை விட பெண்கள்தான் முகத்தின் அழகை பாதுகாப்பதில் பல வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் முகத்திற்கு அதிகமாக மேக்கப் சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த மேக்கப் சாதனங்களை முகத்திற்கு அதிமாக பயன்படுத்தும் பொழுது அதுவே இயற்கையான முகத்தின் அழகை பாதிக்கக் கூடும்.
மேலும் சில பெண்கள் முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு பல வகையான கிரீம் வகைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் அதனால் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே நன்மை உண்டாகும். பின்னர் அந்த பொருள்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்.
இயற்கையான முறையில் முகத்தின் அழகை பாதுகாக்க பழ வழிமுறைகள் உள்ளது. அதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த பதிவில் முகத்தை பளபளப்பாக மாறுவதற்கு சில எளிமையான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம். இந்த வழிமுறைகளை இரவில் தூங்குவதற்கு முன்பு செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
முகம் பளபளப்பாக மாற இரவில் செய்ய வேண்டிய சில வழிமுறைகள்…
* பெண்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் முகத்திற்கு போட்ட மேக்கப்பை கலைத்துவிட்டு(Remove) தூங்கச் செல்லலாம்.
* இரவு தூங்கச் செல்லும் முன்னர் மேக்கப் ரிமூவரை பயன்படுத்தி நீங்கள் உங்கள் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
* முகத்திற்கு போட்ட வெறும் மேக்கப்பை மட்டும் அகற்றினால் முகம் சுத்தமாகி விடாது. அதனால் ஃபேஸ் வாஷ் அல்லது கிளென்சரை பயன்படுத்தி முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
* சருமத்திற்கு பயன்படுத்தப்படும் சீரம் பயன்படுத்துவது உங்களுடைய முகத்திற்கு நல்லது. முகத்தில் பருக்கள் உள்ளவர்கள் அதற்கு தகுந்தது போல சீரம் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
* சீரம் பயன்படுத்தப் பிடிக்காதவர்கள் மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்தலாம். அல்லது நைட் கிரீமை முகத்திற்கு பயன்படுத்தலாம்.
இந்த எளிமையான வழிமுறைகளை செய்தால் முகம் பளபளப்பாக மாறும். மேலும் சருமம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.