உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாற வேண்டுமா? இன்று இந்த தெய்வத்திற்கு வெண்பூசணி விளக்கு ஏற்றுங்கள்!

0
855

உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாற வேண்டுமா? இன்று இந்த தெய்வத்திற்கு வெண்பூசணி விளக்கு ஏற்றுங்கள்!

பைரவரை வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும் என்பது நம்பிக்கை. பொதுவாக பைரவருக்கு தீபம் ஏற்றும் பொழுது பைரவர் சிலை துணியிட்டு மூடப்பட்டிருந்தாலும் அல்லது கதவு மூடப்பட்டிருந்தாலோ வழிபடக்கூடாது.

மொத்தம் 64 பைரவர்கள் இருக்கின்றன. எல்லா பைரவர்களுக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம். தற்போது நம்முடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர பைரவருக்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக பைரவருக்கு வாரத்தில் ஒரு முறை ஏழு தீபம் ஏற்றுவது சிறந்தது. ஆனால் அதனை விட சிறந்தது சனிக்கிழமை என்று வெண்பூசணியில் தீபம் ஏற்றுவது தான்.

இவ்வாறு வாரம் தோறும் வரும் சனிக்கிழமை அன்று வெண்பூசணியில் தீபம் ஏற்றி வந்தால் 3 அல்லது 4 வாரங்களிலேயே சிறந்த பலன்களை காணலாம். பைரவர் வழிபாடு என்றாலே கை மேல் பலன் என சொல்லுவது ஐதீகம். எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், விபத்து, ஜாதகத்தில் தோஷம் இவைகளில் இருந்து காப்பாற்றக் கூடியவர் என்றால் பைரவர் தான். உங்களுக்கு எந்த விதமான துன்பம் ஏற்பட்டாலும் பைரவரை சரணடைந்தால் உடனடியாக அதற்கான பலன்களை உங்களுக்கு தருவார்.

சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து மாலை கோவில் நடை அடைப்பதற்கு முன்பு வரை வெண்பூசணியில் பைரவருக்கு தீபம் ஏற்ற வேண்டும். மேலும் பூசணி விளக்கு போடும்பொழுது சிவன் அல்லது பைரவரை மனதில் நினைத்துக் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு வாரம் தோறும் செய்து வர வாழ்க்கை தலைகீழாக மாறும் என கூறப்படுகிறது.

 

Previous articleதமிழக அரசின் கிராம உதவியாளர் பணி! 2000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்?
Next articleவெள்ளி மற்றும் தங்கம் பெருக வேண்டுமா! இந்த தெய்வங்களை மட்டும் வழிபடுங்கள்!