உங்களுடைய வேண்டுதல் உடனடியாக நிறைவேற வேண்டுமா? பூஜை செய்யும் பொழுது இதனை கவனியுங்கள்!

0
1744

உங்களுடைய வேண்டுதல் உடனடியாக நிறைவேற வேண்டுமா? பூஜை செய்யும் பொழுது இதனை கவனியுங்கள்!

அனைவரும் தினமும் ஒரு முறையாவது கடவுளை எண்ணி வணங்குவது இயல்பு. இவ்வாறு நீங்கள் இறைவனிடம் வேண்டுதல் வைக்கும் பொழுது உங்களுக்கு எந்த அறிகுறி தெரிந்தால் உங்களின் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். ஒவ்வொருவரும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பூஜை செய்வார்கள்.

நீங்கள் கடவுள் இருக்கு நெய்வேதியம் படைக்கும் பொழுது அந்த இடத்தில் பல்லி இருந்தாலோ அல்லது பல்லியின் நடமாட்டம் இருந்தாலும் உங்களது வேண்டுதலை இறைவன் ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம். நீங்கள் பூஜை செய்து முடித்த சில நொடிகளில் உங்களது வீட்டிற்கு யாரேனும் வந்தால் அவர்களுக்கு உடனடியாக ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் கடவுளுக்கு படைத்த படையலில் இருந்து சிறிதளவு கொடுக்க வேண்டும்.

பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது கருப்பு நிற வண்டு உங்கள் வீட்டிற்குள் வந்தால் உங்களது பூஜையை இறைவன் ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம். பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுதோ அல்லது பூஜை செய்து முடித்த பிறகும் உங்கள் வீட்டின் வாசலில் மாடு, நாய், பூனை போன்ற வாயில்லாத ஜீவன்கள் வந்தால் உங்களுடைய பிரார்த்தனை உடனடியாக நிறைவேறும் என்று அர்த்தம். பூஜை செய்யும் பொழுது காகம் கரைந்தால் அவை நல்ல சகுனமாக கருதப்படுகிறது. பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது சாமி படத்தில் இருந்து பூக்கள் விழுந்தால் இறைவன் உங்களை ஆசீர்வதித்துள்ளார் என்று அர்த்தம்.

நீங்கள் பூஜை செய்து முடித்த உடனடியாக சுமங்கலி பெண்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால் குங்குமம் அல்லது தாம்பூலம் கொடுக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

 

Previous articleகொடநாடு கொலை தொடர்பான வழக்கு! விசாரணையை கையில் எடுத்த சிபிசிஐவி தனிப்படை காவல்துறையினர்!
Next articleஎப்பா அந்த செருப்பை எடுத்துட்டு வா! பொது மேடையில் திமுக பொருளாளரால் உண்டான சர்ச்சை!