சமீபமாக சமூக ஊடகங்களில் பரவிய ஒரு செய்தியில், பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு இடையே நிலவும் பதற்றம் காரணமாக, மத்திய அரசு ₹50,000 ரொக்கம் மற்றும் அவசியமான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்பட்டது. இந்த செய்தி பலரிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என பத்திரிகைத் தகவல் பூர்வமான பிஐபி (Press Information Bureau) அதிகாரப்பூர்வமாக மறுக்கிறது. இது போலியான அறிவுறுத்தல் என்று குறிப்பிடப்பட்டு, இதுபோன்ற பச்சை பொய்களை நம்ப வேண்டாம் என்றும், பொதுமக்கள் எப்போதும் அரசு இணையதளங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மட்டும் நம்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லிங்க்:
https://x.com/PIBFactCheck/status/1919774839218540992?t=kZ3frP9sxxNg5H-76ne9Pg&s=19
இந்த போலி செய்தி வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற பல சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவது இந்திய இணைய குற்றச் செயல்கள் சட்டப்படி கடும் குற்றமாகும். தவறான செய்திகள் சமூகத்தில் பயம், குழப்பம் மற்றும் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை பரப்பாமல் இருக்க ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.