வாரிசு படத்தின் டிரைலர் வெளியீடு! 20 நிமிடங்களில் 2 லட்சம் பார்வையாளர்கள்!

0
300

விஜய் நடித்த வாரிசு படத்தின் டிரைலர் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த ட்ரெய்லருக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

பீஸ்ட் படத்திற்கு பின்பு நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தான் வாரிசு பொங்கலுக்கு வெளியிடப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, குஷ்பூ, ஜெயசுதா, உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அதிரடி ஆக்சன், குடும்ப செண்டிமெண்ட், காதல், பாசம் என பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பொங்கலுக்கு துணிவு படத்திற்கு போட்டியாக வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.

ஏற்கனவே துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு முதலிடத்தைப் பிடித்த நிலையில் வாரிசு படத்தின் டிரைலர் அதை முறியடிக்குமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இன்று மாலை 5 மணி அளவில் வெளியிடப்பட்ட ட்ரெய்லரை 20 நிமிடங்களில் 2 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 2 நிமிடங்கள் 28 செகண்ட்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டு அமோக வரவேற்பு பெற்று வருகிறது. படத்தில் வரும் வசனங்கள் அனல் தெரிகின்றன. ட்ரெய்லரிலேயே விஜயின் அதிரடி ஆக்சனை பார்க்க முடிகிறது. எனக்குப் போட்டி நான் தான் என விஜய் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். அதன்படி பக்கா ஆக்சன் படமாக வெளியாக உள்ளது வாரிசு.

“எல்லா இடமும் நம்ம இடம்தான்”

“கிரவுண்ட் மொத்தமும் உன் ஆளுங்க இருப்பானுங்க ஆனா ஆடியன்ஸ் ஒருத்தன தான் பார்ப்பாங்க”

என டிரைலர் முழுவதும் பஞ்ச் வசனமாக கலக்கியுள்ளார் விஜய். குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்தாலும் ஆக்ஷனில் ரசிகர்களுக்கு குறை வைக்காமல் அதிரடி காட்டி கலக்கியுள்ளார் விஜய்.

சென்னை ரோகினி தியேட்டர் மட்டுமின்றி தமிழகத்தின் பல தியேட்டர்களில் வாரிசு ட்ரெய்லர் ரிலீஸ்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ட்ரெய்லரை தியேட்டரில் பார்த்துவிட்டு ரசிகர்கள் வேற லெவல் என கொண்டாடி வருகின்றனர்.

 

Previous articleரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம்! திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதி!
Next articleதினமும் ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!! இந்தநோய்யெல்லாம் உங்களை நெருங்கவே நெருங்காது!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here