எச்சரிக்கை..பெற்றோர்கள் இதை செய்ய தவறினால் செல்வமகள் சேமிப்பு கணக்கு க்ளோஸ் ஆகிடும்!!

0
154
Warning..If parents fail to do this Selvamalam savings account will be closed!!
Warning..If parents fail to do this Selvamalam savings account will be closed!!

பெண் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் அமைந்திட மத்திய அரசு கொண்டுவந்த மகத்தான திட்டம் செல்வமகள் சேமிப்பு.இந்த சிறுசேமிப்பு திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது.அஞ்சல் அலுவலங்கள் மூலம் செயல்பட்டு வந்து இந்த திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கப்படுவதால் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கி முதலீடு செய்து வருகின்றனர்.

குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி கணக்கை தொடங்கலாம்.இதில் ஒரு வருடத்தில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.இத்திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும்.ஆனால் பெற்றோர் 15 ஆண்டுகள் மட்டும் முதலீடு செய்தால் போதும்.21 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் அசல்,வட்டி,கூட்டு வட்டி என்று பல மடங்கு லாபம் கிடைக்கும்.

பெண் குழந்தைக்கு 18வது நிறைவடைந்த பின்னர் தேவைக்காக பணம் எடுத்துக் கொள்ள முடியும்.10 வயதத்திற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் பெற்றோர் கணக்கு துவங்கலாம்.ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பெயரில் மட்டுமே கணக்கு தொடங்க முடியும்.

பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகள் பாதுகாவலர் உதவிடவுன் கணக்கு தொடங்க முடியும்.இந்த திட்டத்தில் மாதம் ரூ.2000 முதலீடு செய்து வந்தால் 15 ஆண்டுகள் கழித்து அசல் ரூ.3,60,000 ஆக இருக்கும்.21 வருடங்கள் கழித்து அசல் + வட்டி என்று ரூ.11,16,815 கிடைக்கும்.

செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க தேவைப்படும் ஆவணங்கள்:

*பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
*பெண் குழந்தையின் பெற்றோர் (அ) பாதுகாவலரின் புகைப்படம்
*பெற்றோர் (அ) பாதுகாவலரின் அடையாளம் மற்றும் முகவரிச் சான்று

செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கிய பிறகு டெபாசிட் தொகையை சரியாக கட்டி வர வேண்டும்.ஒருவேளை டெபாசிட் தொகையை கட்டத் தவறினால் கணக்கு மூடப்பட்டுவிடும்.பிறகு ரூ.50 அபராதம் செலுத்தி மீண்டும் கணக்கை புதுப்பித்துக் கொள்ள முடியும்.