எச்சரிக்கை.. ரேசன் அட்டைதாரர்கள் இதை செய்யவில்லை என்றால் அனைத்து அரசு நலத்திட்டங்கள் ரத்தாகிவிடும்!!

0
280
Warning.. If ration card holders do not do this all government welfare schemes will be cancelled!!
Warning.. If ration card holders do not do this all government welfare schemes will be cancelled!!

எச்சரிக்கை.. ரேசன் அட்டைதாரர்கள் இதை செய்யவில்லை என்றால் அனைத்து அரசு நலத்திட்டங்கள் ரத்தாகிவிடும்!!

இந்தியர்களுக்கு முக்கிய அடையாமகளாக ரேசன் அட்டை உள்ளது.இந்திய குடியுரிமை பெற ரேசன் அட்டை முக்கிய ஆவணமாகும்.நம் நாட்டில் கோடிக்கணக்கான குடும்பங்கள் ரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி,கோதுமை மற்றும் மலிவு விலை பருப்பு,சமையல் எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் முக்கிய திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளது.இந்த திட்டத்தில் பயன்பெற ரேசன் கார்டு முக்கிய ஆவணமாகும்.இவ்வாறு இருக்கையில் ரேசன் கார்டுடன் ஆதார் எண் இணைக்காத குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வருகின்ற செப்டம்பர் 30 வரை வழங்கப்பட்டு இருக்கிறது.

ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

நீங்கள் நியாயவிலை பொருட்கள் வாங்கும் ரேசன் கடைக்கு சென்று உங்கள் ஆதார் அட்டையின் நகல்களை சமர்ப்பிக்கவும்.பிறகு பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை செய்யவும்.பிறகு உங்கள் உங்கள் ஆதார் எண் ரேஷன் கார்டுடன் இணைக்கப்படும்.

ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை ரேசன் கார்டுடன் இணைப்பது எப்படி?

முதலில் TNePDS மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யவும்.பின்னர் உங்கள் ரேஷன் எண்ணைப் பதிவிட்டு உள்நுழையவும்.அடுத்து ஆதார்-ரேசன் கார்டு இணைப்பு பட்டனை கிளிக் செய்து உங்கள் விவரங்களை உள்ளிடவும்.பின்னர் OTP எண்ணை பதிவிடவும்.இவ்வாறு செய்த பின்னர்உங்கள் ஆதார் எண் ரேச ன் கார்டுடன் இணைக்கப்பட்டு விடும்.

Previous articleUrine Infection: சிறுநீர்ப்பாதை தொற்று குணமாக.. சாதம் வடித்த கஞ்சி போதும்!
Next articleEB பில் கட்ட மறந்தவர்களுக்கு மின்வாரியமே தந்துள்ள செம்ம ஐடியா!! என்னவென்று தெரியுமா?