எச்சரிக்கை.. மொபைலுக்கு சார்ஜ் போட்ட பிறகு இந்த தவறை செய்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்!!
இன்றைய நவீன உலகில் பிறந்த குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர்கள் வரை மொபைல் பயன்படுத்தி வருகின்றனர்.ஸ்மார்ட் போன் மூலம் உலகில் எந்த ஒரு இடத்தில் நிகழக் கூடிய எளிய நிகழ்வுகளையும் எளிதில் தெரிந்த கொள்ள முடிகிறது.நாட்டு நடப்புகள்,அறிவை வளர்த்துக் கொள்ள வழிகள் மற்றும் பொழுது போக்கிற்காக ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுகிறது.அதிகரித்து வரும் மொபைல் போன் ஆதிக்கத்தால் மனித குலம் பல ஆபத்துகளை சந்தித்து வருகிறது.
நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் 30% கீழ் சார்ஜ் இருந்தால் அவை ஆபத்துகளை தான் ஏற்படுத்தும்.அடிக்கடி சார்ஜ் போடுவது,சார்ஜ் போட்டபடி மொபைல் பயன்படுத்துவது போன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
ஸ்மார்ட் போனிற்கு சார்ஜ் போடும் பொழுது மட்டுமல்ல சார்ஜ் செய்த பின்னர் சில விஷயங்களை அவசியம் பின்பற்ற வேண்டும்.அதன்படி மொபைல் சார்ஜ் செய்த பின்னர் ஸ்விட்ச் ஆப் செய்து சார்ஜரை சுவிட்ச் போர்டில் இருந்து கழட்டி விட வேண்டும்.ஆனால் இதை பலர் செய்வதில்லை.சிலர் சுவிச் கூட ஆப் செய்யாமல் சார்ஜில் இருந்து போனை எடுக்கின்றனர்.இதனால் மின்சாரம் தாக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
சார்ஜ் ஆப் செய்யப்படாமல் விடுவதால் அதிக மின்சாரம் வெளியேறுகிறது.இதனால் மின்கட்டணம் உயர வாய்ப்பிருக்கிறது.எனவே மொபைலுக்கு சார்ஜ் போட்ட பிறகு ஸ்விட்ச் ஆப் செய்து விட்டோமா என்று உறுதிப்படுத்திக் கொண்டு சார்ஜில் இருந்து மொபைல் போனை எடுக்கவும்.பிறகு சார்ஜரை கழட்டி தனியாக ஓர் இடத்தில் வைத்து விடவும்.