லவ்வர்ஸ்-க்கு எச்சரிக்கை.. இனி இந்த கிஃப்ட் கொடுத்தால் ஜெயில் தான்! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!
காதலர்கள் அவர்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் காதலன் மற்றும் காதலிகளுக்கு வித்தியாசமான முறையில் பரிசளிப்பது தற்பொழுது பேஷன் ஆக மாறிவிட்ட நிலையில், அந்த வகையில் ஃபேஸ் மாப் என ஆரம்பித்து பல விதங்களில் தங்களின் காதலை வெளிப்படுத்தும் விதமாக பரிசுகளை அளித்து வருகின்றனர்.
அவற்றிலும் இறந்தவர்களை கூட நேரில் கொண்டுவரும் விதமாக அவர்களின் உருவ சிலையை கொடுப்பது அவர்கள் உள்ள புகைப்படத்தை தற்பொழுது உள்ளவர்களுடன் இணைத்து வரைந்து அதனை பரிசளிப்பது என்று புது புது முறையில் தங்களின் காதலை வெளிப்படுகின்றனர்.
அந்த வகையில் புதிதாக பிளட் ஆர்ட் எனப்படும் தங்களின் ரத்தத்தை எடுத்து அதன் மூலம் ஓவியம் தீட்டி தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வழங்குவது ட்ரெண்ட் ஆகி வந்தது.
அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கொரோனா தொற்று பரவி வருவதால் அனைத்து மருத்துவமனைகளும் ஆக்சிஜன் சிலிண்டர்கையிருப்பில் இருப்பது அவசியம். மேலும் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
தற்பொழுது தொற்றுப் பரவல் ஆங்காங்கே அதிகரித்து வருவதால் இனி ப்ளட் ஆர்ட் எனப்படும் ரத்தத்தினை எடுத்து ஓவியம் வரையும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.அரசாங்கம் விதித்த தடையை மீறி செயல்படும் ப்ளட் ஆர்ட் நிறுவனங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.