ரேஷனில் பொருள் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை!! இப்படி செய்தால் கட்டாயம் குடும்ப அட்டை பறிமுதல்!!

Photo of author

By Rupa

ரேஷன் கார்டு : “தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்” கீழ், பொது விநியோக அமைப்பில் இருந்து மானிய விலையில் பொருட்கள், வாங்க தகுதியுடைய குடும்பங்களுக்கு, மாநில அரசால் வழங்கப்படும் ஒரு அதிகாரப்பூர்வமான ஆவணமாகும். இதை பயன்படுத்தி மக்கள் மானிய விலையில் அரிசி , பருப்பு , எண்ணெய், கோதுமை போன்ற ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்க முடியும்

ரேஷன் கார்டில் இரண்டு வகை உள்ளது:
1. முன்னுரிமை குடும்ப அட்டை (PHH)
2. அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை (AAY)

இந்த குடும்ப அட்டைகளுக்கு மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை கொண்டு ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும். அதன் அடிப்படையில் (PHH) குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு “5 கிலோ” உணவு தானியமும், (AAY) குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு “35 கிலோ” உணவு தானியமும் பெறுவதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் சரி வர விநியோகம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும், வழங்கப்படும் பொருட்களை, மக்கள் கள்ள சந்தையில் விற்பதாகவும், தகவல் வருடம் தோறும் தொடர் கதையாகவே இருக்கிறது. அதை தடுப்பதற்காக காவல்துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் புகார்கள் ஓய்ந்தபாடில்லை.

ரேஷன் அரிசி எங்கேதான் செல்கிறது: ரேஷன் கடைகளுக்கு வரும் அரிசிகள் மூட்டை மூட்டைகளாக, கேரளா,ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் , அரிசியை அரைத்து விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கும் விற்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதை தடுப்பதற்காக காவல்துறையில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் “தூத்துக்குடியில்” ரேஷன் கார்டுகளை வைத்துள்ள மக்களிடம் இருந்து, அரிசிகளை வாங்கி கேரளா கடத்த உள்ளதாக தகவல் ஒன்று காவல் துறைக்கு வந்தது. இதனை கவனத்தில் கொண்ட காவல்துறை நடத்திய சோதனையில், ஒரு வீட்டில் “50 கிலோ எடை கொண்ட 10 கும்” மேற்பட்ட அரிசி மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது தூத்துக்குடி காவல்துறை. இருந்த போதிலும் புகார்கள் ஓயவில்லை.

இதனை தொடர்ந்து “மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்”, பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது, பொதுமக்கள் யாரும், தங்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை, கள்ள சந்தையில் விற்பனை செய்தால், அவர்களுடைய “ரேஷன் கார்டு பறிமுதல் செய்யப்படும்” என்று தெரிவித்திருக்கிறார். இதன் விளைவாக “ரேஷன் பொருட்கள் கடத்தல் குறைந்திருப்பதாக” மக்கள் தெரிவிக்கின்றனர்.