எச்சரிக்கை! தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! பள்ளி கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்த உள்ளதால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்கால ஆசிரியர் பணியிடங்கள் விண்ணப்பங்களை கல்வித்துறை வரவேற்கிறது. மொத்தம் 13331 காலியிடங்கள் உள்ளன.
உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தேவைக்காக புதிய அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆனால் விண்ணப்பனார் கடைசி நாள் என்பதால் ஆர்வம் உள்ளவர் உடனடியாக விண்ணப்பிக்கவும்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் தற்கால ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இதுவரை விண்ணப்பிக்காதோர் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை புதன்கிழமை இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையர்களுக்கு அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளார்.
பள்ளி கல்வித்துறை வரையத்துள்ள கல்வி தகுதிகள் அடிப்படையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி வரை காலியாகி உள்ள பணியிடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும். இந்த பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட வட்டார கல்வி அதிகாரிகளுடன் ஜூலை 4ம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை மாவட்ட கல்வி அதிகாரிகள் தொகுத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் பள்ளிக்கு டெட் முதல் நாள் தேர்விலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் இரண்டாம் தாள் தேர்வில் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு முதுநிலை பட்டிய படிப்புடன் பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தால் முன்னுரிமை படி வழங்க வேண்டும். அதாவது இடைநிலை பட்டதாரி பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்களுக்காக பணிபுரிந்து வருபவர்கள் அல்லது தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
முதுநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியாக நடத்தி தேர்வில் பங்கு பெற்று பங்கேற்று சான்றிதழ் சார்பில் கலந்து கொண்டவர்கள் அல்லது பள்ளி அருகே அமைந்துள்ளவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். இதில் தகுதி பெறும் பட்டதாரிகளை வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வைத்து அவர்கள் திறனறிந்து பின்னர் பணி நியமனம் செய்ய வேண்டும். மேலும் இந்தப் பணியிடம் தற்காலிகமானது. பணி மற்றும் நடத்தையில் திருப்தி இல்லையெனில் உடனடியாக நிக்கப்படுவார் என பட்டதாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.