அனைவரும் இதற்கு தயாராக இருக்க வேண்டும்!

Photo of author

By Sakthi

இந்தியாவில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது ஒரு நாளைய நோய்த்தொற்றின் பாதிப்பு எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

ஆனால் இந்த நோய் தொற்றின் முதல் அலையின்போது இதன் இரண்டாவது அலை இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த நோய்த் தொற்றையும் மூன்றாவது அறை தொடர்பாக அறிவுறுத்தல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அந்த விதத்தில் மூன்றாவது அலைக்கு நாம் அனேக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சஞ்சீவ் பஜாஜ் தெரிவித்திருக்கிறார்.

ஜூலை மாதத்திற்குள் ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது நடைபெறும் என்று நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.அதோடு இந்த வருட இறுதிக்குள் வயது வந்தவருக்கு தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்படும் அரசின் திட்டமானது பட்ஜெட்டில் தொடரவேண்டும் என தெரிவித்திருக்கிறார்.