பொதுத்தேர்வு ரத்தா? +2 மாணவர்களுக்கு தமிழக அரசு தரப்போகும் குட் நியூஸ்!

0
81
General election canceled? Good news from the Tamil Nadu government for +2 students!
General election canceled? Good news from the Tamil Nadu government for +2 students!

பொதுத்தேர்வு ரத்தா? +2 மாணவர்களுக்கு தமிழக அரசு தரப்போகும் குட் நியூஸ்!

கொரோனா தொற்றானது கடந்த ஆண்டு ஆரம்பித்த நிலையில் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் முடிவில்லாமல் தொடர்கிறது.மக்கள் அனைவரும் இத்தொற்றிலிருந்து மீள்வதற்கு பெருமளவு முயற்சி செய்து வருகின்றனர்.இத்தொற்றிலிருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்து நோய்கள் உருமாறி பரவ ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.

அந்தவகையில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே செல்ல வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்தே எந்த வித பொது தேர்வும் நடத்தவில்லை.கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் மாணவர்களை ஒன்று திரட்டி தேர்வு நடத்தினால் அதிகளவு பரவ ஆரம்பித்துவிடும் என்பதால் 12ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வின்றி ஆள் பாஸ் செய்தனர்.

தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் பல ஆலோசனைகள் நடந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் நேற்று முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.அந்த ஆலோசனையின் முடிவில் சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பொறுத்தே தமிழ்நாட்டில் +2 தேர்வு நடத்துவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறினார்.அதேபோல நேற்று மதியம் பிரதமர் நரேந்திரமோடி,மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

அதில் தொற்று பரவல் அதிகமாக உள்ள காரணத்தினால் சிபிஎஸ்இ +2 பொது தேர்வு ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பை வெளியிட்டார்.அதனைத்தொடர்ந்து  இன்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,செயலாளர் காகர்லா உஷா,ஆணையர் நந்தகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டு ஆலோசனை நடத்த உள்ளனர்.தற்போது சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்திலும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படலாம் எனக் கூறுகின்றனர்.