தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கி அதன்பின் பசங்க திரைப்படத்தின் மூலமாக நாயகனாக மக்களிடையே வரவேற்பை பெற தொடங்கியவர் நடிகர் விமல். நடிகர் விமல் என்றாலே அவருடைய திரைப்படம் கிராமத்து கதை அம்சங்கள் நிறைந்ததாகவே வெளியாகி வருகின்றன.
பெரும்பாலும் நடிகர் விமல் தேர்வு செய்த பசங்க களவாணி தூங்கா நகரம் வாகை சூடவா போன்ற பல வெற்றி படங்கள் கிராமத்து பின்னணி கதையை கொண்டு இருப்பதால் மிகப்பெரிய வெற்றியடைந்ததோடு தேசிய விருதுகளையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய முகத்திற்கும் தன்னுடைய திறமைக்கும் கிராமத்து கதை மட்டுமே ஒத்துவரும் என அதை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் விமல். வெற்றி படங்களை கொடுத்தாலும் சற்றே இடைவெளி இவருடைய சினிமா வாழ்க்கையில் காணப்பட்டது. அதுபோன்ற ஒரு சமயத்தில்தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து தாமாகவே ஒரு திரைப்படத்தை தயாரிக்க நினைத்து அதில் தானே நடிக்கவும் செய்திருக்கிறார். அப்படி தயாரிக்கப்பட்ட வெளியான திரைப்படம் தான் மன்னர் வகையறா. இந்த திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் முகம் கொடுத்ததோடு நடிகர் முகமும் விமலவர்கள் கொடுத்து மிகப்பெரிய வெற்றியை இது தரும் என நினைத்திருந்த நிலையில் இந்த படம் சரியாக மக்களிடையே ஓடவில்லை என்பதை உண்மையாக மாறியது.
தன் மிகப்பெரிய வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் தேசிய விருது பெற்ற படங்களில் நடித்திருந்தாலும் தயாரிப்பாளர் என்று வரும் பொழுது கதையை தேர்வு செய்வது அந்த கதை எப்படி மக்களிடம் சென்று சேரும் என்பது குறித்த பல முக்கிய முடிவுகளை எடுப்பதில் நடிகர் விமலுக்கு என்ன சிக்கல் ஏற்பட்டதோ மன்னர் வகையறா திரைப்படம் தோல்வியை சந்தித்ததால் பல கோடி கணக்கில் சம்பாதித்து வைத்திருந்த மொத்த பணமும் இழந்துவிட்டாராம் நடிகர் விமல். தயாரிப்பாளர் ஆகணும்னு நினைச்சது ஒரு ஆசையா இப்படி வந்து சிக்கிட்டேனே என தற்பொழுது புலம்பி கொண்டிருக்கிறார்.