படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதா?!! ஷங்கரின் இந்தியன் 2  வெளிவந்த நியூ அப்டேட்!!

0
149
Was the shooting stopped midway?!! Shankar's Indian 2 New Update!!
Was the shooting stopped midway?!! Shankar's Indian 2 New Update!!

படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதா?!! ஷங்கரின் இந்தியன் 2  வெளிவந்த நியூ அப்டேட்!!

இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும் . இந்த படத்தை  பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கினார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பல நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

இந்த படம் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில்,  ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளியிட்டது. இத்திரைப்படம் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. இந்நிலையில் இந்தியன் 2 தயாரிப்பதாக  கடந்த செப்டம்பர்  2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன் முதல் படப்பிடிப்பு ஜனவரி 2019 ஆம் ஆண்டு தொடங்கியது.

மேலும் பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது. இதனால் பாதியில் படப்பிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெறு வருகிறது. இந்த இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பரீத் சிங், பிரியா பவானி சங்கர் போன்ற பிரபல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

தற்போது படப்பிடிப்பின்  இறுதிகட்டம்  சென்னை விமானம் நிலையத்தில் தொடங்கியது. பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் நிறுத்தும் இடத்தில் படம் எடுக்க அனுமதி வாங்கியது. ஆனால் முறையான அனுமதி பெறாமல் கழிவறையில் ஒரு காட்சி எடுத்துள்ளார்கள். இதனால் விமான நிலைய அதிகாரிகள் படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டனர். மேலும் போலீசாரும் படப்பிடிப்பை நிறுத்தும் படி கூறினார்கள். அதனையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் அதற்காக ஜிஎஸ்டி ரூபாய் 1.24 கோடி கட்டணம் விமான நிலையத்திற்கு செலுத்துவதாக கூறினார். அதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் படப்பிடிப்பு நடத்தும்படி அறிவித்துள்ளார்கள். அதனையடுத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

author avatar
Jeevitha