நேற்று முன்தினம் லடாக் பகுதியில் நடந்த இந்திய-சீன ராணுவ மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.வீர மரணம் அடைந்தவர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி(வயது 40) என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரர்கள் நடத்திய எதிர் தாக்குதலில் சீன ராணுவ தரப்பில் 43 பலியாகினர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.கடல் மட்டத்திலிருந்து பல்லாயிர மீட்டர் உயரத்தில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலையில் இந்த மோதல் நடந்துள்ளது
இரு நாடுகளிடமும் சக்தி பொருந்திய அணு ஆயுதங்களும் பிற நவீன ஆயுதங்கள் ஏராளம் உள்ள நிலையில் இந்த தாக்குதலில் துப்பக்கிசூடு நடைபெறவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் இந்த மோதலில் கற்களும்,கம்பிகளும் பயன்படுத்தபட்டதாக கூறப்படுகிறது.துப்பாக்கிசூடு நடந்திருந்தால் உயிரிழப்புகள் அதிகமாகி இருக்கும் என்பது தவிர்க முடியாத உண்மை.