பறவைகளின் தாகத்தைப் போக்கச் சாலைகளில் தண்ணீர் கேன்! அசத்தல் முயற்சி!

Photo of author

By Parthipan K

பறவைகளின் தாகத்தைப் போக்கச் சாலைகளில் தண்ணீர் கேன்! அசத்தல் முயற்சி!

உலகின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் உடையத் தாக்கம் மக்கள் அனைவரையும் பயங்கரமாக தாக்கி வருகிறது. அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் உள்ளதால் மக்கள் உயிர் இழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் வாயில்லா ஜீவன்கள் பல வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் இல்லாமலும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் தண்ணீரின்றித் தவிக்கும் பறவைகளுக்குத் துபாயின் ஷார்ஜாவில் உள்ள ஒரு பகுதியில் கோடைக் காலத்தை ஒட்டி அரசும் அப்பகுதியில் வாழும் பொதுமக்களும் பறவைகளுக்கு தாகம் தீர்க்க உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தண்ணீர் கேன்கள் பல இடத்தில் வைத்துள்ள இச்சம்பவம் மக்களை நெகிழ்ச்சிச் செய்ய வைத்துள்ளது. 7 ஆண்டுகளாக இந்தச் சேவைத் தொடர்ந்து வருகிறது.

ஐக்கிய அமீரகத்தில் தற்போது கடும் வெப்பம் நிலவும் நிலையில் பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்களுக்கு உதவிடும் வகையில் நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டுள்ளன. டிப்பால் ஹசின் நகராட்சி,கவுன்சில் மற்றும் காவல் நிலையம் உள்ளிட்ட அரசுத் துறைகள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையொட்டி நகரின் முக்கியமான நூறு இடங்களில் இந்த தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த கேன்களில் தண்ணீர் தானாகவே வெளியேறும் வகையில் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை அங்கு வரும் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் குறித்து தங்களுடைய தாகத்தை தீர்த்து வருகின்றனர்.

அரசு துறைகள் மட்டுமல்லாது இந்த பகுதியில் வாழ்ந்து வரும் பொதுமக்களும் தங்களது பங்களிப்பாக தங்களது வீடுகளின் அருகில் உள்ள பறவைகளுக்காகத் தண்ணீரை வைத்து ஆதரவு அளித்து வருகின்றனர். அதிகமான வெப்பநிலையின் காரணமாக தாக்கம் ஏற்பட்டு பறவைகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் இந்த பணியானது சிறப்பாக நடந்து வருகிறது.

இதைக் குறித்து பேசிய அசின் நகராட்சியின் தலைவர் அப்துல்லா, ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் சமூகப் பொறுப்புணர்வு, அடிப்படையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை குறித்தும், இந்த பணி நடந்து வருகிறது .ஐக்கிய அமீரக தலைவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையாக இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. மறைந்த அதிபர் ஷேக் ஜாயித், சுல்தான் உள்ளிட்ட தலைவர்களின் வழிகாட்டுதலில் இத்தகைய பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணியானது தொடர்ந்து இன்றும் நடந்து வருகிறது என்றார்.