Water Wastage Fine: குடிக்கும் நீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் – அரசின் அதிரடி அறிவிப்பு!!
தலைநகர் டெல்லியில் தற்பொழுது குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.டெல்லி மக்களுக்கு யமுனை ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்த யமுனை நதி ஹரியானாவில் இருந்து தலைநகர் டெல்லி வழியாக ஓடுகிறது.இந்நிலையில் ஹரியானா அரசு டெல்லிக்கு வழங்க வேண்டிய யமுனை நதி நீரை குறைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.இதனால் டெல்லிக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டியிருக்கிறது.ஹரியானாவை ஆளும் பாஜக அரசு தேர்தல் நேரத்தில் இதுபோன்ற பழிவாங்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது என்று ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டி வருகிறது.
டெல்லியில் பொதுமக்களுக்கு தினமும் இருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டால் நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்படும் என்று அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி தெரிவித்திருக்கிறார்.
மேலும் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.கார்,பைக் போன்ற வானங்களை கழுவுதல்,செடிகளுக்கு தண்ணீர் விடுதல்,கட்டுமானங்களுக்கு பயன்படுத்துதல் போன்ற செயல்களுக்கு குடிநீரை வீண் செய்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க டெல்லி குடிநீர் வாரியத்திற்கு அமைச்சர் அதிஷி உத்தரவிட்டிருக்கிறார்.இந்நிலையில் டெல்லி முழுவதும் குடிநீர் வீணாகுவதை தவிர்க்க குடிநீர் வாரியம் 200 குழுக்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.