உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் தர்பூசணி ஜூஸ்! இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க! 

Photo of author

By Sakthi

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் தர்பூசணி ஜூஸ்! இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!
வெயில் காலம் வந்தாலே அனைவரும் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை தான் தேடிச் செல்கின்றோம். அதில் நன்மை இருக்கின்றதா இல்லையா என்பது கூட. தெரியாமல் வெயிலுக்கு இதமாக இருக்கும் என்று நினைத்து அதிக குளிர்ச்சி உடைய பொருட்களை நாம் சாப்பிடுகிறோம். குளிர்ச்சியான தண்ணீரை குடிக்கின்றோம்.
இந்த குளிர்ச்சியான உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது அதிக குளிர்ச்சியான தண்ணீரை குடிக்கும் பொழுதும் நம் உடலுக்குள் இருக்கும் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுகின்றது. இது நமக்கு நாளடைவில் தான் தெரியும். அவ்வாறு உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அதிக குளிர்ச்சி தரும் பானங்கள் மற்றும் தண்ணீரை குடிக்காமல் நம்முடைய உடலுக்கு நீர்ச்சத்து அளிக்கக் கூடிய பழங்களை வாங்கி சாப்பிடலாம்.
அந்த வகையில் நமக்கு தர்பூசணி ஏற்றது. தர்பூசணியில் அதிக அளவில் நீர்ச்சத்து இருக்கின்றது. இந்த தர்பூசணி பழங்களை நாம் சாப்பிடும் பொழுதும் ஜூசாக குடிக்கும் பொழுதும் நம்முடைய உடலுக்குள் நீர்ச்சத்து அதிகம் ஆகின்றது. இதனால் உடல் நீரேற்றத்துடன் இருப்பதுடன் உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறுகின்றது. இந்த தர்பூசணி பழத்தை வைத்து சத்துக்கள் மிகுந்த ஜூஸ் எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* தர்பூசணி பழம்
* புதினா இலைகள்
* மிளகுத்தூள்
* எலுமிச்சை
* சர்க்கரை
* ஐஸ் கியூப்கள்
செய்முறை:
முதலில் மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் தர்பூசணி பழத்தை விதை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஐந்து புதினா இலைகள் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் கால் ஸ்பூன் அளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக இதில் இரண்டு ஐஸ் கியூப்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதோ தர்பூசணி ஜூஸ் ரெடி. இதை வடிகட்டி விட்டு தேவைப்பட்டால் இதனுடன் இன்னும் இரண்டு ஐஸ் கியூப்கள் சேர்த்து குடிக்கலாம். இதை குடிப்பதால் வெயிலுக்கு இதமாக இருக்கும். மேலும் உடல் புத்துணர்ச்சி பெறும்.