மது கடையில் அலைமோதிய கூட்டம்! ஒரே நாளில் 292.09 கோடி சேல்ஸ்!

Photo of author

By Rupa

மது கடையில் அலைமோதிய கூட்டம்! ஒரே நாளில் 292.09 கோடி சேல்ஸ்!

தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.இரு மூத்த தலைவர்கள் இன்றி நடந்த தேர்தல் என்பதால்,மக்கள் முடிவுகளை எண்ணி ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.கடந்த பிரச்சாரத்தின் போது முறையான கொரோனா விதிமுறைகளை கடைபிக்காததால் பலருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் எற்பட்டத்து.இதில் பல தலைவர்களின் உயிரும் பலியானது.அந்தவகையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளர் மாதவராவ் என்பவருக்கு பிரச்சாரத்தின் போதே கொரோனா தொற்று உறுதியானது.

அதற்கடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அதனையடுத்து பலருக்கு கொரோனா தொற்று பரவியது.இதனால் உயர்நீதிமன்றம்,தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டியது.அதிக அளவு கொரோனா தொற்று பரவலை அறிந்தும் தேர்தல் ஆணையம் எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லை.அதனால் தொற்று அதிகரிப்புக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம்.அதுமட்டுமின்றி கொலைக்குற்றவியல் வழக்கையே தேர்தல் ஆணையத்தின் மீது போடலாம் என உயர்நீதிமன்றம் கண்டித்தது.

அதனால் வாக்கு எண்ணும் நாளன்று,வாக்கு எண்ணும் உறுப்பினர்கள் அரசு தரப்பு அதிகாரிகள் தவிர வெளியாட்கள் யாரும் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே இருக்க கூடாது.அதுமட்டுமின்றி வெற்றியை கொண்டாட பட்டாசுக்கள் வெடிப்பது,ஊர்வலம் செல்வது என அனைத்திற்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அதனால் மதுபான கடைகள் சனி,ஞாயிறு இரு நாட்களும் செயல்படவும் தடை விதித்துள்ளது.

வெற்றியை கொண்டாடுவதற்கும்,இரு நாட்கள் கடை இருக்காது என்பதற்காகவும் நேற்று மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது.அந்தவகையில் நேற்று ஓர் நாளில் மட்டும் 292.09  கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.அதிகபட்ச விற்பனையாக சென்னையில் ரூ.63.44 கோடியாகவும்,மதுரையில் ரூ.59.63 கோடியாகவும்,சேலத்தில் ரூ.56.72 கோடியாகவும்,திருச்சியில் ரூ.56.38 கோடியாகவும் விற்பனையாகியுள்ளது.