நண்பனே உன் பாதையை நீயே தேர்ந்தெடு வெற்றி நிச்சயம்!!

Photo of author

By Pavithra

நண்பனே உன் வாழ்க்கையில் எல்லாரும் ஓடிகின்றார்களென்று நீயும் அவர்களை பின் தொடராதே. உனக்கென்னும் ஒரு தனி பாதையை உருவாக்கிக் கொள்.நீ உனக்கென்னும் பாதையை உருவாக்கிக் கொண்டால் திமிரு பிடித்தவன், யார் பேச்சையும் கேட்கதவன்,இதெல்லாம் எங்க உருப்பட போகிறது,இது போன்ற கடும் சொற்களால் உன்னை கொள்வார்கள்.பல பழிச் சொற்களும் உன்னுள் புகுத்துவார்கள். ஏன் உன் தாய், தந்தை,உடன் பிறந்தவர்கள் கூட உன்னை உதவாககறை என்று கூறுவார்கள்.நீ இந்த உலகிற்கு பிறந்ததே பயனற்றது என்று கூட கூறுவார்கள்.

ஆனால்,நண்பா நீ எதையும் பொருட்படுத்தாதே.உனக்கான பாதையை நீ தேர்ந்தெடுத்துக்கொள்.உன் இலக்கை அடையும்வரை முயற்சி செய்து கொண்டே இரு அதே பாதையில்.மனம் தளராதே,முயற்சி செய்ய சலிக்காதே!வருங்காலம் உனதே!வெற்றி உனதே!உன்னை
பழித்தூற்றியவர்களெல்லாம் உன் காலடியில்!வெற்றிகொள் தன்னம்பிக்கையோடு!

இப்படிக்கு
உங்களில் நான்