பாத எரிச்சலை சரி செய்யக்கூடிய வழிகள்!!இதோ வீட்டு வைத்தியம்!!
உங்கள் காலில் நீங்கள் உணரக்கூடிய எரிச்சல், மிகவும் கடுமையான நிலைக்கான ஓர் அறிகுறியாக இருக்கலாம். மேலும், உங்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் கூட அமையக்கூடும். கால்களில் எரியும் உணர்வு ஏற்படுவதற்கான பொதுவான காரணம் என்ன என்று பார்த்தால், நரம்பு சேதம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை தான். இவை தவிர, இது ஏற்படுவதற்க்கு பிற காரணங்களும் உள்ளன.
டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும். கற்றாழையில் உள்ள சதை பகுதியை பாதத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் எரிச்சல் தணியும்.
தேவையான பொருட்கள்:
1.மருதாணி இலை – தேவையான
2.அளவு
3.வெட்டி வேர் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
4.அருகம்புல் சாறு – 1 கப்
5.பன்னீர் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
தேவையான அளவு மருதாணி இலையை எடுத்து அதனை சுத்தப்படுத்தி பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும். அரைத்த பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் வெட்டி வேர் பவுடர், பன்னீர் 2 டேபிள் ஸ்பூன், அருகம்புல் சாறு 1 கப் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
பின் இதை பாதத்தில் தடவி 1 மணி நேரம் ஊறவைத்து பின்னர் தண்ணீரில் கழுவி விடலாம். இதில் பயன்படுத்தபட்ட பொருட்கள் அனைத்தும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியவை, எனவே உங்களின் பாதங்களில் உள்ள எரிச்சல் அனைத்தும் விரைவில் குணமாகும்.