டி20 உலக கோப்பை! இந்திய அணியை சந்திசிரிக்க வைக்க போகும் இருவர்!

Photo of author

By Vijay

டி20 உலக கோப்பை தொடர்பான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். தமிழக வீரர்கள் அஷ்வின், நடராஜன், தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை. கே.எல்.ராகுலுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்சர் படேல், குல் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அணியின் ரிசர்வ் வீரர்களாக ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான் அக்கிராருக்கு இடம் கிடைத்துள்ளது. ஓரளவுக்கு கோப்பையை வெல்லும் அணியாகவே இந்திய அணி தயார் செய்யப்பட்டுள்ளது.

#image_title

ஆனால், தற்போது நடந்து வரும் ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கியதால், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மூன்று குழுக்களாக பிரிந்துள்ளதாகவும், அவர்களுக்கு இடையே உள்ள மோதல் காரணமாகவே இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் தோல்விகளை சந்தித்து வருவதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக ரோகித் சர்மாவை மீண்டும் கேப்டனாக நியமிக்க வேண்டும், ரோகித் சர்மாவின் கேப்டன் பதவியை ஹார்த்திக் பாண்டியா பறித்து விட்டதாகவும் ரசிகர்கள் தங்களது ஆதங்கங்களை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

அண்மையில் கூட ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், மும்பை இந்தியன்ஸ் அணியில் பல கோஷ்டிகள் இருப்பதாகவும், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் பேட்டி அளித்திருந்தார்.

நிலைமை இப்படி இருக்கும்போது, தற்போதைய டி20 உலகக் கோப்பை தொடரின் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹார்திக் பாண்டியாவும் சரிவர செயல்படுவார்களா? ஐபிஎல் போல தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த இந்திய அணியில் கோஸ்ட்டி மோதல் ஏற்பட்டு, உலக நாடுகள் கைகொட்டி சிரிக்கும் வண்ணம் நடந்து கொள்வார்களா? என்று கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த ஐபிஎல் தொடரில் சொற்ப ரன்களையே குவித்துள்ளார். அதுவும் அவர் பிறந்த நாளில் நடைபெற்ற ஆட்டத்தில் கூட ரன் குவிக்க முடியாமல் தடுமாறி தனது விக்கெட்டை பறிகொடுத்திருந்தார். இது அனைத்துமே மன உளைச்சலும், கோஷ்டி மோதலும் தான் காரணம் என்று ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதனை இப்படியே விட்டு விடாமல் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றும், முடிந்தால் ஹர்திக் பாண்டியாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்றும் ரசிகர்கள் தங்களின் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.